- Home
- உடல்நலம்
- Kidney Problem: முகத்தில் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உஷார்! சிறுநீரக செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம்
Kidney Problem: முகத்தில் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உஷார்! சிறுநீரக செயலிழப்பு அறிகுறியாக இருக்கலாம்
முகத்தில் காணப்படும் இந்த மாற்றங்கள் சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இவற்றை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் சிகிச்சையை தொடங்க முடியும். அந்த அறிகுறிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சிறுநீரக செயலிழப்பு
சிறுநீரகம் நம் உடலின் முக்கிய உறுப்பாகும். இது இரத்தத்தை சுத்திகரித்து, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. ஆனால் அது சரியாக வேலை செய்வதை நிறுத்தும்போது (சிறுநீரக செயலிழப்பு) அதன் விளைவு முழு உடலிலும், முதலில் முகத்திலும் தெரிய ஆரம்பிக்கும். முகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களை நீங்கள் சரியான நேரத்தில் கண்டறிந்தால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்கலாம்.
கண் வீக்கம்:
காலையில் எழுந்தவுடன் கண்களுக்குக் கீழே அல்லது சுற்றி வீக்கம் தென்பட்டால், அது தூக்கமின்மை அல்லது ஒவ்வாமையால் மட்டும் ஏற்படாது. சிறுநீரக செயலிழப்பின் போது, உடலில் நீர் தேங்கத் தொடங்குகிறது, இது முகம் மற்றும் கண்களுக்கு கீழ் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
முகம் வெளுத்திருத்தல்:
சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாதபோது, இரத்தத்தில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இது இரத்த சோகைக்கு வழிவகுக்கும். நீங்கள் ஓய்வெடுத்தாலும் அல்லது வெயிலில் இருந்தாலும், வெளிறிய முகமாக இதன் விளைவு தெரியும். முகம் வெளிறிப் போய் இருந்தாலோ அல்லது சருமத்தில் நிறமாற்றம் இருந்தாலோ அந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்.
கண்களுக்குக் கீழே கருவளையங்கள்:
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு, உடல் சோர்வடைகிறது, தூக்கத்தின் தரமும் குறைகிறது. இதன் நேரடி விளைவு கண்களுக்குக் கீழே கருவளையங்களாகத் தென்படும்.
உதடு மற்றும் சரும வறட்சி:
சிறுநீரகப் பிரச்சினைகளில், உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். இதன் விளைவு உதடுகள் வெடிப்பு, சரும வறட்சி மற்றும் முகத்தில் பொலிவு குறைதல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும்.
முகத்தில் அசாதாரண சிவத்தல் அல்லது தடிப்புகள்:
சிறுநீரகங்கள் செயலிழக்கும் போது, இரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேற முடியாமல் சருமத்தைப் பாதிக்கும். முகத்தில் சிவப்பு புள்ளிகள், தடிப்புகள் அல்லது அரிப்பு ஏற்படலாம்.
முகத்தில் திடீர் வீக்கம்:
உங்கள் முகம் வீங்கியதாக உணர்ந்தால் அல்லது எந்தக் காரணமும் இல்லாமல் உங்கள் எடை அதிகரித்தால், உடல், கை, கால் ஆகிய இடங்களில் திரவம் தேங்குவதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாகும்.
(குறிப்பு: இந்த அறிகுறிகள் ஆரம்பகால அறிகுறிகள் மட்டுமே. சிலருக்கு இந்த அறிகுறிகள் தோன்றாமல் கூட இருக்கலாம். எனவே முகத்தில் இது போன்ற அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டால் அதை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள 6 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்)