Kidney Failure Symptoms: ஒரு கிட்னியுடன் வாழ முடியுமா? சிறுநீரகம் செயலிழந்து போவதை எப்படி கண்டுபிடிப்பது?
உடல் உறுப்புகளில் முக்கியமானது கிட்னி (சிறுநீரகம்). ஒரு கிட்னியுடன் வாழ்வது சாத்தியமா? கிட்னி செயலிழந்து போவதின் அறிகுறிகள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
kidney health
சிறுநீரகங்கள் நம் உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக மனிதர்கள் அனைவரும் இரண்டு சிறுநீரகங்களுடன் இறைவனால் படைக்கப்படுகிறார்கள். அதில், லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்தோடு (கிட்னி) பிறந்திருப்பார்கள். இதில், சிலர் பிறருக்காக தங்கள் கிட்னியை தானம் செய்தவர்களாக இருப்பார்கள். உடலை தூய்மையாக வைத்திருக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நாம் தினமும் உட்கொள்ளும் பொருட்களின் சத்துக்களை உறிஞ்சி வெளியாகும் கசடுகளை முறையாக சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதுதான் அதன் முக்கிய பங்காகும்.
One kidney
இதை செய்வதற்கு ஒரு சிறுநீரகமே போதுமானது. அதனால் தான் பலராலும் ஒரு கிட்னியோடு வாழ முடிகிறது. ஆனாலும், பாதுகாப்பான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியம். ஒரு கிட்னியோடு வாழும் நபர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள். ஆரோக்கியமான உணவுமுறை, தினமும் உடற்பயிற்சி, சரியான எடையை தக்கவைத்துக் கொள்வது, அதிக நீரை குடிப்பது, சரியான அளவில் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகளை பார்த்துக் கொள்வது. தொடர் மருத்துவ பரிசோதனைகளை சரியான இடைவெளியில் மேற்கொள்வது உள்ளிட்டவைகளாகும்.
kidney infection
சிறுநீரகம் செயல்படுவது நின்றுவிட்டால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?
நீண்ட கால சிறுநீரக பிரச்னைகள் அல்லது எதிர்பாராத தொற்று உள்ளிட்ட சில காரணங்களால் உங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுகளை நீக்கும் திறனை சிறுநீரகம் இழப்பதுதான் சிறுநீரக செயலிழப்பு எனப்படும். இதற்கான சிகிச்சையாக டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே ஒரே தீர்வாகும்.
kidney Failure Symptoms
அறிகுறிகள்
சிறுநீரகத்தை பொறுத்த வரை அதன் வேலையை அது சரியாக செய்து கொண்டிருக்கும். அது எப்படி பாதிப்பு அடைகிறது என்பதே உங்களுக்கு தெரியாது. திடீர் சிறுநீர் மாற்றம் மற்றும் அதிகப்படியான திரவம் சிறுநீர் வழியாக உங்கள் உடலை விட்டு வெளியே வெளியேறினால் அது அறிகுறிதான். உடனே சுதாரித்து கொள்ளுங்கள். மேலும், அரிப்பு, வாந்தி, பசியின்மை, கால் வீக்கம், சுவாச பிரச்சனைகள், வயிற்று போக்கு மூக்கில் ரத்தம் வழிதல், காய்ச்சல் ஆகியவையும் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறியாகும்.