சர்க்கரை நோய்க்கு ஊட்டச்சத்து பானங்களும் காரணமா? உண்மை என்ன?
இந்த இரண்டு பானங்களை குடிப்பது ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Drinks That Can Increase Your Risk of Diabetes : சமீபகாலமாகவே எனர்ஜி ட்ரிங்க் அல்லது சோடா குடிக்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இவை குடிப்பதற்கு சுவையாக இருக்கும் மற்றும் உடலுக்கு உடனடி ஆற்றலையும் வழங்குகிறது. ஆனால் அவற்றை தினமும் குடித்து வந்தால் நாம் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக டைப் 2- நீரிழிவு நோயை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் சர்க்கரை நோய் ஏற்படுத்தும் சில பானங்கள் குறித்து இந்த தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி அவற்றிற்கு பதிலாக என்னென்ன பானங்களை குடிக்கலாம் என்பதை குறித்தும் பார்க்கலாம்..
Drinks that cause diabetes
எனர்ஜி ட்ரிங்க் :
இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உடனடி ஆற்றலை பெறுவதற்காக வொர்க் அவுட் முன் இந்த ட்ரிங்க் குடிப்பார்கள். அதுபோல, இரவு நேரத்தில் விழித்திருந்து படிப்பதற்காக இந்த பானத்தை சிலர் குடிப்பார்கள். இந்த பானத்தில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக உள்ளதால், அது ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்யும். மேலும் இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வந்தால் டைப் 2 சர்க்கரை நோய் வருவது உறுதி. எனவே இந்த பானத்திற்கு பதிலாக சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி மற்றும் ஆற்றல் கிடைப்பதற்கு ஒரு கைப்பிடி அளவு நட்ஸ்கள் சாப்பிடலாம்.
Drinks that cause diabetes
சோடா :
சோடாவும் புத்துணர்ச்சி அளிக்கும் ட்ரிங்க்ஸ் போல கருதப்படுவதால், கோடை காலத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சோடாவிலும் சர்க்கரை அதிக அளவு உள்ளதால் இது உடலில் ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்க செய்து, இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி, டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும். ஆகவே, இதற்கு பதிலாக எலுமிச்சை நீர், தேங்காய் நீர், புதினா நீர் மற்றும் வெள்ளரிக்காய் சாப்பிடலாம்.
இதையும் படிங்க: புதிய டைப் 5 சர்க்கரை நோய் பற்றி தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்
Drinks that cause diabetes
செயற்கையான இனிப்பு பானம் :
சுகர் பிரீ ஜூஸ், டயட் சூடா போன்ற பல செயற்கையான இனிப்பு பானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பானங்களில் இருக்கும் செயற்கை இனிப்புகள் உடலில் இன்சுலின் எதிர்ப்பு மற்றும் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும். எனவே இந்த பானத்திற்கு பதிலாக கிரீன் டீ, செம்பருத்தி டீ ஹெர்பல் டீக்களை குடியுங்கள்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் உஷார்!! கண்ணில் இந்த அறிகுறிகள் வந்தா அலட்சியம் பண்ணாதீங்க!
Drinks that cause diabetes
மோட்சா ட்ரிங்க் :
இந்த பானத்தை எப்போதாவது குடிக்கலாம். ஆனால் அடிக்கடி குடித்தால் மற்றும் சர்க்கரை நோய் ஏற்படும். ஒரு கப் மோட்சா பானத்தில் 300 முதல் 400 கல்லூரிகள் உள்ளன. மேலும் இந்த பானத்தில் சேர்க்கப்படும் விப்ட் கிரீம் ஃபிளேவர்டு சிரப்பானது, ஒரு பீஸ் கேக்கில் இருக்கும் சர்க்கரை அளவைவிட அதிகமாக காணப்படும். எனவே இவற்றிற்கு பதிலாக சர்க்கரை இல்லாத காபி குடிக்கலாம்