MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • புதிய டைப் 5 சர்க்கரை நோய் பற்றி தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல் 

புதிய டைப் 5 சர்க்கரை நோய் பற்றி தெரியுமா? மருத்துவர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல் 

புதியதாக டைப் 5 சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அது குறித்த விரிவான பதிவு உள்ளே.. 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 21 2025, 03:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Details On Type 5 Diabetes : பெற்றோரிடமிருந்து  குழந்தைகளுக்கு மரபணு மூலம் நீரிழிவு நோய் வரலாம்.  ஒருவேளை பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைகளுக்கு  வரவும் 50 சதவீதம் வாய்ப்புள்ளது. இந்நிலையில் டைப் -1, டைப் -2 நீரிழிவு நோய் தவிர, புதியதாக டைப் 5 நீரிழிவு நோய் இருப்பதாக தற்போது உறிதியாகியுள்ளது. இந்த நோய் குழந்தைகளை பாதிக்கலாம். பதின்பருவம் அல்லது 20 வயதுகளில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு டைப் 5 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. 

25
Details On Type 5 Diabetes

Details On Type 5 Diabetes

சர்க்கரை நோய்: 

பொதுவாக சர்க்கரை நோய் வருவதற்கு மரபணு ரீதியான காரணங்கள் சொல்லப்படுவதுண்டு. உடலின் தேவைக்கு அதிகமாக உண்பவர்கள், உடற்பயிற்சி போன்ற உடற்செயல்பாடு அறவே இல்லாதவர்களுக்கும் இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது. டைப் 1 சர்க்கரை நோய் பாதிப்பு பரம்பரை பாதிப்பு காரணமாக வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு வரலாம். டைப் 2 சர்க்கரை நோய் மரபணு, முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள்,  போதிய உடற்செயல்பாடு இல்லாததால் வரும். டைப் 2 சர்க்கரை நோயின் பாதிப்புதான் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்த நோய்களை கட்டுக்குள் வைக்கும் அதே நேரத்தில் இந்தியாவில் டைப் 5 நீரிழிவு நோய் இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

35
Details On Type 5 Diabetes

Details On Type 5 Diabetes

டைப் 5 நீரிழிவு நோய்; 

அண்மையில் பாங்காக்கில் நடைபெற்ற சர்க்கரை நோய் குறித்த மாநாட்டில் பேசப்பட்டவைகள் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில் டைப் 5 நீரிழிவு நோய் பற்றி சொல்லப்பட்டது. இந்த நோயானது இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதைத் தடுக்க வளரும் குழந்தைகளுக்கு சத்தான சரிவிகித உணவினை அளிக்க வேண்டும். 

இதையும் படிங்க:  சர்க்கரை நோயாளிகள் உஷார்!! கண்ணில் இந்த அறிகுறிகள் வந்தா அலட்சியம் பண்ணாதீங்க!

45
Details On Type 5 Diabetes

Details On Type 5 Diabetes

யாருக்கு வரலாம்? 

இந்த டைப் 5 நீரிழிவு நோய் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன்  தொடர்புடையது.  டைப் 1 மற்றும் டைப் 2 ஆகிய சர்க்கரை நோயில் இருந்து  வேறுபட்டது. டைப் 5 சர்க்கரை நோய் ஒல்லியான, ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படும் இளம் வயதினரை பாதிக்கும். 

இதையும் படிங்க:  வெறும் '2' நிமிடங்கள் சாப்பிட்ட பின் வாக்கிங்!நீரிழிவு நோயை விரட்ட சூப்பர் டிப்ஸ்!! 

55
Details On Type 5 Diabetes

Details On Type 5 Diabetes

தடுக்க வழிகள்: 

- கர்ப்பகாலத்தில் பெண்கள் சத்தான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தொடர்ந்து அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து சர்க்கரை நோயை தடுக்கலாம். 

- பதின்பருவ குழந்தைகளுக்கு உணவில் அதிகளவு புரதமும், குறைந்த அளவு கார்போஹைட்ரேட்டுகளும் இருக்குமாறு பார்த்து கொள்ள  வேண்டும். வைட்டமின் சத்துகளை எடுத்து கொள்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
குழந்தைகளில் நீரிழிவு நோய்
பெற்றோர் ஆலோசனை
குழந்தைகள் நல பராமரிப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved