சர்க்கரை நோயாளிகள் உஷார்!! கண்ணில் இந்த அறிகுறிகள் வந்தா அலட்சியம் பண்ணாதீங்க!
சர்க்கரை நோய் உள்ளவர்களின் கண்களில் இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை ஒருபோதும் புறக்கணிக்கவே கூடாது. ஏனெனில் அது ஆபத்தை விளைவிக்கும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Diabetes Who Should Not Avoid These Eye Symptoms : சர்க்கரை நோய் என்பது உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உண்டாகும் நோயாகும். மேலும் இது குணப்படுத்த முடியாத ஒரு நோய். எனவே இதை கட்டுக்குள் அதன் அறிகுறிகளை அடையாளம் காண்பது ரொம்பவே முக்கியம். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் போது குளுக்கோஸின் அளவு கணிச்சமாக அதிகரிக்கும். இதன் விளைவாக அவரது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். முக்கியமாக, உடலில் பல உறுப்புகளிலும் பாதகமான விளைவை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் சிறுநீரகங்கள், இதயத்தை மட்டுமல்லாமல், கண்களையும் பாதிக்கிறது.
இதையும் படிங்க: தாய்க்கும் தந்தைக்கும் சர்க்கரை நோய் வந்தால் குழந்தைக்கும் வர வாய்ப்பு உள்ளதா?
Symptoms of Diabetic Eye Disease
இத்தகைய சூழ்நிலையில், ஒரு நபருக்கு சர்க்கரை நோய் வந்த பிறகு உடலில் சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கும் போது, அந்த நபரின்
கண்களில் சில அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். அவற்றை புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணித்தால், எதிர்காலத்தில் பார்வையை நிரந்தரமாக இழக்க நேரிடும். அந்த அறிகுறிகளை என்ன? அது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படிங்க: சர்க்கரை நோய் வந்த கர்ப்பிணிகள் இந்த உணவை மறந்து கூட சாப்பிடாதீங்க!
Symptoms of Diabetic Eye Disease
சர்க்கரை நோயாளிகள் புறக்கணிக்க கூடாத கண்ணில் தோன்றும் அறிகுறிகள்:
1. மங்கலான பார்வை - சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென மங்கலான பார்வை அல்லது இரட்டை பார்வை தோன்ற ஆரம்பித்தால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். சில சமயம் இந்த அறிகுறிகள் சர்க்கரை நோய் உறுதியாவதற்கு முன்பாகவே தென்படலாம். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது கண்களில் இருக்கும் சிறிய ரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதுதவிர, விழித்திரையையும் பாதிக்கும். சர்க்கரை நோய் வருவதற்கு முன்பாகவே இந்த அறிகுறி தோன்றும்.
2. கண்களுக்கு முன் புள்ளி - சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண்களுக்கு முன்னால் புள்ளி இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதற்குக் காரணம் நன்குலாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் தான்.
Symptoms of Diabetic Eye Disease
3. கண்கள் ஒளிர்வது போன்ற உணர்வு - சர்க்கரை நோயாளிகள் தங்களது கண்களில் மின்னல் அல்லது ஃப்ளாஷ் கோடுகளை உணரலாம் அல்லது பார்க்கலாம். இதற்கு காரணம் விழித்திரைக்கு எதிராக கண்ணாடி திரவம் தேய்ப்பதால் தான் இது நிகழ்கின்றது. எனவே உங்களது கண்ணில் அடிக்கடி மின்னல் போன்ற உணர்வை கண்டால் அலட்சியம் செய்யாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
4. கண் வலி - சர்க்கரை நோயாளிகளின் கண்ணில் கிளைக்கோமா என்னும் கண்ணுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை வரும். இதன் காரணமாக கண்களில் வலி தலைவலி உண்டாகும். இந்த அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.
Symptoms of Diabetic Eye Disease
5. கண்களில் எரிச்சல் - ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால், நீண்ட நாள் புறக்கணித்தால் கண்களின் நரம்பில் சேதத்தை ஏற்படுத்தும். காரணமாக சில சமயங்களில் கண் எரிச்சல் பிரச்சனை ஏற்படும்.
குறிப்பு : மேலே சொன்ன அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் புறக்கணித்தால் கண் பார்வை பாதிக்கப்படும்.. எனவே இந்த அறிகுறிகளை கவனித்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.