- Home
- உடல்நலம்
- Cancer Prevention : கேன்சரையே தடுக்கும் 'அற்புத பானம்' எது தெரியுமா? வெறும் வயிற்றில் குடித்தால் நோயே வராது
Cancer Prevention : கேன்சரையே தடுக்கும் 'அற்புத பானம்' எது தெரியுமா? வெறும் வயிற்றில் குடித்தால் நோயே வராது
கேன்சர் வராமல் தடுக்கும் அற்புத பானம் குறித்தும் அதன் தயாரிப்பு முறையையும் இங்கு காணலாம்.

நம் உடலில் பல நோய்கள் உணவுப் பழக்கத்தால் வரக் கூடியவை. சில நோய்களை உணவுகள் மூலம் சரி செய்யவும் முடியும். சரியான உணவு பழக்கமே நோய் இல்லாத வாழ்க்கைக்கு அடித்தளம். புற்றுநோய் மாதிரியான கொடிய நோய்களை தவிர்க்க 4 பொருட்கள் கொண்ட ஒரு பானம் உதவுவதாக ஊட்டச்சத்து நிபுணர் தெரிவித்துள்ளார். அந்த பானம் குறித்து இந்த பதிவில் காண்போம்.
இந்த பானத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், இயற்கை நச்சு நீக்கிகள் உள்ளன. உடலை நச்சுக்கள் நீக்கி சுத்தமாக வைக்க உதவும். இதில் உள்ள அனைத்து மூலப்பொருளும் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த அற்புத பானம் உதவும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
இந்த பானம் தயாரிக்க மஞ்சள், நெல்லிக்காய், இஞ்சி, கருப்பு மிளகு ஆகிய நான்கும் போதும். இது புற்றுநோய் காரணிகளான வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஆய்வுகளின்படி, மஞ்சளில் உள்ள குர்குமின் சில புற்றுநோய் செல்களுடைய வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. டிஎன்ஏவை சேதம் அடைவதிலிருந்து பாதுகாக்கிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமுள்ளது. செல்களை வயதாகும் நிகழ்விலிருந்து பாதுகாக்கும். நெல்லிக்காயில் உள்ள பாலிபினால்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. கல்லீரல் ஆரோக்கியம், செரிமானம் மேம்பட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
இஞ்சியில் வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளன. உடலில் புற்றுநோய் செல்கள் பரவுவதை இஞ்சி தடுக்கிறது. ல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. கருப்பு மிளகில் உள்ள பைப்பரின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். மஞ்சளில் உள்ள குர்குமின் உறிஞ்சுதலை கிட்டத்தட்ட 2000% அதிகரிக்கும். கருப்பு மிளகுடன் இணைந்து எடுக்கும்போதுதான் மஞ்சளின் நன்மைகள் உறிஞ்சப்படுகின்றன.
கேன்சரை தடுக்கும் பானம்
அரை இஞ்ச் பச்சை மஞ்சள், 1 நெல்லிக்காய், இரண்டு இஞ்ச் அளவில் இஞ்சி துண்டு, இரண்டு கருப்பு மிளகு ஆகியவை போட்டு தண்ணீர்விட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதைக் குடிப்பதால் வளர்சிதை மாற்றம் மேம்படும். உடலில் நச்சுகள் நீங்கும். வீக்கம் தொடர்பான எல்லா நோய்களும் வரும்முன் தடுக்கப்படும்.