MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Lung Cancer Symptoms : நுரையீரல் புற்றுநோய் வந்தா இப்படியும் ஆகும்!! இந்த அறிகுறிகளை உடனே கவனிங்க!

Lung Cancer Symptoms : நுரையீரல் புற்றுநோய் வந்தா இப்படியும் ஆகும்!! இந்த அறிகுறிகளை உடனே கவனிங்க!

சாதாரணமாகத் தெரியக் கூடிய நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகளை இங்கு காணலாம்

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 07 2025, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Lung Cancer Symptoms
Image Credit : Getty

Lung Cancer Symptoms

ஆபத்தான புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோயும் அடங்கும். இது ஆரம்பத்தில் சாதரண அறிகுறிகளை தான் வெளிப்படுத்தும். சுவாசக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா ஆகியவற்றுடன் பொருந்தும் பொதுவான அறிகுறிகளை வெளிக்காட்டுவதால் தாமதமாகவே கண்டறியப்படுகிறது. இங்கு அலட்சியமாக விடக் கூடிய 5 அறிகுறிகளை காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இருமல்
Image Credit : Getty

இருமல்

உங்களுக்கு 3 வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இருமல் இருந்தால் அது நுரையீரல் புற்றுநோய்க்கான ஒரு அறிகுறிதான். சாதாரண சளி அல்லது ஒவ்வாமைக்கு சிகிச்சை எடுத்த பின்னும் நிவாரணம் இல்லாமல் இருமல் தொடர்ந்தால் மருத்துவரை அணுகுங்கள். இதை மக்கள் சளி அல்லது சுவாசக்குழாய் அழற்சி என நினைத்து அலட்சியம் செய்கின்றனர். புற்றுநோய் கட்டி நுரையீரலில் உள்ள சுவாசப்பாதையில் எரிச்சலை உருவாக்குவதால்தான் இருமல் வருகிறது. மோசமான இருமல் இருக்கும் நபர்கள் மருத்துவரை அணுக வேண்டும்.

36
எடை குறைதல்
Image Credit : Getty

எடை குறைதல்

திடீரென எடை குறைதல் மற்றும் தொடர்ச்சியான சோர்வு ஆகியவை கூட நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்தான். இந்த எடை குறைதலுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் தொடர்பில்லை. மன அழுத்தமும் காரணமாக இருக்கலாம். புற்றுநோய்க்கு எதிராக போராட உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. ஆகவே கடுமையாக எடை குறையும். அன்றாட வேலைகளை செய்யக் கூட சிரமப்படுவார்கள்.

46
மூச்சுத் திணறல்
Image Credit : Getty

மூச்சுத் திணறல்

சாதரண செயல்களை செய்யும்போதும் மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் வந்தால் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து சோர்வு, பலவீனம், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் புற்றுநோய் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் இருப்பதன் அறிகுறிகளாகும்.

56
தோள்பட்டை வலி
Image Credit : Getty

தோள்பட்டை வலி

தொடர்ச்சியான தோள்பட்டை வலி கூட நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையதுதான். மோசமான நிலையில் தூங்கியதால் இந்த வலி வருவதாக மக்கள் நினைக்கிறார்கள். நுரையீரல் புற்றுநோய் கட்டிகள் வந்தால் அது மார்பு மற்றும் தோள்பட்டையில் தொடர்ந்து வலியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். சிரிக்கும்போதும், ​​இருமும்போதும் கூட வலிக்கும்.

66
கரகரப்பான குரல்
Image Credit : Getty

கரகரப்பான குரல்

உங்களுக்கு தொண்டை தொற்று அல்லது சளி போன்றவை இல்லாமல் கரகரப்பான குரல் இருந்தால், அது நுரையீரல் புற்றுநோயாக இருக்கலாம். நுரையீரலில் புற்றுநோய் வந்தால் குரல் நாண் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். இது நரம்பு பாதைகளை சேதப்படுத்திவிடும். இதனால் நிரந்தர குரல் மாற்றங்கள் வரலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
புற்றுநோய்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Papad Curry : அப்பளத்தைப் பொரித்து சாப்பிடுவது மட்டும்தானா? அதில் குழம்பே செய்யலாம்!
Recommended image2
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Related Stories
Recommended image1
Kidney Cancer : இதை சாதாரண விஷயம்னு அலட்சியம் காட்டாதீங்க!! கிட்னி கேன்சர் வார்னிங்கா இருக்கலாம்
Recommended image2
Exercise and Cancer : இந்த ஒரு 'எக்சர்சைஸ்' போதும்! ஒட்டுமொத்த புற்றுநோய் செல்களை ஒழிக்கும் - ஆய்வில் புதிய தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved