- Home
- உடல்நலம்
- Acidity : இனியும் ஏமாறாதீங்க! அசிடிட்டி, நெஞ்செரிச்சலுக்கு இந்த '4' விஷயங்களை ட்ரை பண்ணாதீங்க! இதுதான் சரி
Acidity : இனியும் ஏமாறாதீங்க! அசிடிட்டி, நெஞ்செரிச்சலுக்கு இந்த '4' விஷயங்களை ட்ரை பண்ணாதீங்க! இதுதான் சரி
Stop Remedies for Acidity : நெஞ்செரிச்சல் இருக்கும் போது என்னென்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Stop Remedies for Acidity
பெரும்பாலும் நாம் நெஞ்செரிச்சலுக்கு பலவிதமான வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுவவோம். ஆனால் அவை எல்லாமே அதற்கு சிறந்த தீர்வளிக்குமா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஆம், சில நேரங்களில் நெஞ்செரிச்சல் ஏற்படும்போது ஜில் வாட்டர் குடிப்பது, வாழைப்பழம் சாப்பிடுவதால் போன்ற வீட்டு வைத்தியங்களை நாம் எடுப்போம். ஆனால் அவை அசிடிட்டி பிரச்சனையை மேலும் அதிகமாகிவிடும். எனவே நெஞ்செரிச்சல் இருக்கும்போது என்னென்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழம்
சிலர் நெஞ்செரிச்சல் இருக்கும்போது வாழைப்பழத்தை சாப்பிடுங்கள், என்று சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அப்படி சாப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிறு உப்புசத்தை அதிகரிக்க செய்து விடும். எனவே நெஞ்செரிச்சல் இருக்கும்போது ஒருபோதும் வாழைப்பழத்தை சாப்பிடாதீர்கள்.
குளிர்ந்த பால்
நெஞ்செரிச்சல் இருக்கும்போது குளிர்ந்த பால் குடித்தால் பிரச்சனை சரியாகும் என்று நம்மில் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது தவறு. ஏனெனில் குளிர்ந்த பால் குடிப்பது தற்காலிகமாக தான் வயிற்றுக்குள் அமிலத்தை அமைதிப்படுத்த உதவும். அதுமட்டுமல்லாமல் பால் உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யும். அதோடு அமில தன்மையை அதிகரிக்கவும் செய்யும். எனவே நெஞ்செரிச்சல் இருக்கும் போது குளிர்ந்த பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
ஜில் வாட்டர்
அசிடிட்டி பிரச்சனை இருக்கும் போது ஜில் வாட்டர் குடித்தால் நெஞ்செரிச்சல் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், ஜில்வாட்டர் குளிர்ந்த உணர்வை மட்டுமே கொடுக்கும். அதுவும் குறைந்த நேரம் மட்டுமே. பின் மீண்டும் அசிடிட்டி பிரச்சனை வரும். எனவே அசிடிட்டி பிரச்சனை இருக்கும் போது ஜில் வாட்டர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
இஞ்சி மிட்டாய்
சிலருக்கு நெஞ்செரிச்சல் இருக்கும்போது இஞ்சிமிட்டாய் சாப்பிடும் பழக்கம் இருக்கும். உங்களுக்கும் இந்த பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்துங்கள். ஏனெனில் இது அமிலத்தன்மை பிரச்சினையை மேலும் அதிகரிக்க தான் செய்யும்.
நெஞ்செரிச்சல் இருக்கும்போது செய்ய வேண்டியவை :
- உங்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் உடனே மோர் குடிக்கலாம். ஏனெனில் இது அசிடிட்டியை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் அதிக புளிப்பிலாத மோர் தான் குடிக்க வேண்டும்.
- அசிடிட்டி இருக்கும்போது சூடான நீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையை குறைத்து விடலாம்.
- சீரகம் நீர், சோம்பு நீர், துளசி நீர் போன்ற மூலிகை நீர் அசிடிட்டியை குறைக்க உதவுகிறது.
- நெஞ்செரிச்சல் இருக்கும்போது மூச்சை உள்ளே இழுத்து பொறுமையாக வெளியே விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் அசிடிட்டி குறையும்.
- நெஞ்செரிச்சல் இருக்கும்போது சிறிது தூரம் வாக்கிங் செய்து வந்தால் அமிலத்தன்மை குறையும்.