அசிடிட்டி பிரச்சனைக்கு நீங்கள் அடிக்கடி ஈனோ பயன்படுத்துகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான்..!
இரைப்பை பிரச்சனை என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது சில குறிப்பிட்ட உணவை சாப்பிட்டால் வரக்கூடியது. முந்தைய காலத்தில் இந்த பிரச்சனைக்கு சீரகம், இஞ்சி போன்ற வீட்டு வைத்தியங்கள் பயன்படுத்தி சரி செய்து விடுவார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சில நிமிடங்களில் இரைப்பைப் பிரச்சினை குணமாக ஈனோவை (ENO) தண்ணீரில் கலந்து குடிக்கிறார்கள்.
ஆனால் இதனை அதிகப்படியான பயன்பாடு குடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஈனோ அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் தரும் என்றாலும், அதை அடிக்கடி பயன்படுத்துவது செரிமான ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்று சொல்லுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், நீங்களும் ஈனோவை அடிக்கடி பயன்படுத்துகிறீர்கள் என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அப்போதாவது ஈனோவை இனி பயன்படுத்தலாமா? கூடாதா? என்று உங்களுக்கே புரியும்.
ஈனோவும்! செரிமான அமைப்பும்!
நிபுணர்களின் கூற்றுப்படி, ஈனோவில் சிட்ரிக் அமிலம் மற்றும் சோடியம் பைகார்பனேட் உள்ளன. எனவே இதை நீங்கள் அடிக்கடி பயன்படுத்தினால் அது உங்களது வயிற்றில் அமில உற்பத்தியை குறைத்து இறுதியில் செரிமானத்தை மெதுவாகும். மேலும் அமில எதிர்ப்பு மருந்துகளை சாப்பிடுவதை தூண்டும்.
மாற்று வழி உண்டா?
நீங்கள் அடிக்கடி இன்னும் பயன்படுத்துவதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள்.
- உணவுக்கு முன் ஓமம், இஞ்சி, கல் உப்பு சேர்க்கலாம்.
- உணவுக்கு முன் 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் குடிக்கலாம்.
- உணவு சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்களது செரிமான அமைப்பை மந்தமாக்கும்.
- சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள். அப்போதுதான் செரிமான பிரச்சனை வராது.
அசிடிட்டி பிரச்சினை வருவதை தடுக்க..
1. தேங்காய் தண்ணீர்
இது இயற்கையாகவே குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. மேலும் இது உங்களது உடலின் pH சமநிலைப்படுத்த உதவும். தேங்காய் தண்ணீர் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மட்டுமில்லாமல் அசிடிட்டி தொடர்பான பிரச்சனையையும் போக்க உதவுகிறது.
2. வெந்தய தண்ணீர்
வெந்தய தண்ணீர் செரிமானத்தை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. சிறிதளவு வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அசிடிட்டி பிரச்சனை வரவே வராது.
3. மூலிகை டீ
இஞ்சி டீ போன்ற மூலிகை டீ உங்களது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. அதிலும் குறிப்பாக இஞ்சி டீ வீக்கத்தை குறைக்கவும், நெஞ்செரிச்சலை போக்கவும் உதவும்.
