Micro Walks Benefits : வாக்கிங் போக நேரமில்லையா? மைக்ரோ வாக்கிங் ட்ரை பண்ணுங்க!!
வாக்கிங் செல்ல நேரமில்லாதபோது, கிடைக்கும் நேரத்தில் நடப்பதை மைக்ரோ வாக்கிங் என்கிறார்கள். அதன் செயல்முறை, நன்மைகளை பற்றி இங்கு காணலாம்.

Micro Walks Benefits
தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது உடலை ஆரோக்கியமாம வைக்க உதவும். ஆனால் பலருக்கும் அதற்கான நேரம் வாய்ப்பதில்லை.நடைபயிற்சிக்கோ, உடற்பயிற்சிக்கோ நேரமில்லாமல் இருப்பவர்களுக்கு மைக்ரோ வாக்கிங் நல்லதொரு தீர்வு.
மைக்ரோ வாக்கிங்:
மைக்ரோ வாக்கிங் என்றால் குறுநடையை குறிக்கும். வெறும் 2 முதல் 10 நிமிடங்கள் வரை நடக்கக் கூடியது. நீங்கள் அமர்ந்த நிலையில் வேலை செய்யும் நபராக இருந்தால் மைக்ரோ வாக்கிங் சிறிய இடைவெளி போல இருக்கும். உடலுக்கும் பல நன்மைகளை செய்யும்.
எவ்வாறு நடப்பது?
ஒரு போன் அழைப்புக்கு பதிலளிப்பது, தண்ணீர் நிரப்ப உங்கள் மேசையிலிருந்து எழுந்து வெளியே செல்வது ஆகிய செயல்கள் கூட மைக்ரோ வாக்கிங் அட்டவணையில் வரும். நீங்கள் குறைந்த காலடிகள் நடந்தாலும் அவை அடிக்கடி செய்யப்படும்போது அதிகமான காலடி எண்ணிக்கைகளை கொண்டிருக்கும்.
ஆய்வில் தகவல்
ஆயிரம் காலடிகள் நடக்க கூட சில அடிகள் தான் தொடக்கம். அண்மையில் மிலன் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், ராயல் சொசைட்டி பி-யின் செயல்முறைகள் வெளியிடப்பட்டன. முழுநீள நடைபயணத்தை விட அதே தூரத்தை குறிப்பிட்ட இடைவெளிகளுடன் குறுகிய நடைப்பயணமாக மாற்றும்போது 60% அதிக ஆற்றலை எரித்ததாகக் கண்டறியப்பட்டது. அதனால் மிகக் குறுகிய இந்த மைக்ரோ வாக்கிங் நெடுங்கால நன்மையைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மைக்ரோ வாக்கிங் நன்மைகள்
அமர்ந்த நிலையில் வேலை செய்பவர்களின் எடை அதிகரிப்பை குறைக்க, மனச்சோர்வை குறைக்க, தசைகளின் இயக்கத்தை குறைக்க மைக்ரோ வாக்கிங் உதவுகிறது. ரொம்ப நேரம் அமர்ந்திருந்தால் வளர்சிதை மாற்றம் தாமதமாகும்; இரத்த ஓட்டமும் பாதிக்கிறது. இது மட்டுமின்றி நாள்பட்ட நோய் அபாயத்தையும் அதிகரிக்கக் கூடும். இதிலிருந்து உடலை பாதுகாக்க மைக்ரோ வாக்கிங் உதவுகிறது. மைக்ரோ வாக்கிங் செல்வதை சிறு சிறு டாஸ்குகளாக பிரித்து 5 அல்லது 10 நிமிடங்களாக நடந்து முடித்தால் மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபமைன், எண்டோர்பின்கள் சுரக்கலாம். இது உங்களுடைய உற்சாகத்தை அதிகப்படுத்தும். கவனம் அதிகரிக்கும். படைப்பாற்றல் மேம்படும். மன அழுத்தம் குறையும்.