தினமும் வெறும் வயித்துல '7' கறிவேப்பிலை சாப்பிடுங்க.. உடல்ல 'இந்த' விஷயம் நடக்கும்!
Curry Leaves On Empty Stomach : தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

தினமும் வெறும் வயித்துல '7' கறிவேப்பிலை சாப்பிடுங்க.. உடல்ல 'இந்த' விஷயம் நடக்கும்!
கறிவேப்பிலை சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. இவை ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் காலை வெறும் வயிற்றில் 5-7 கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலில் பல பிரச்சினைகள் நீங்கும். இப்போது இந்த பதிவில் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
காலை நோய் பிரச்சினையை குணமாக்கும்:
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் காலை நோய் பிரச்சனை சரியாகும். கறிவேப்பிலையில் இருக்கும் பண்புகள் குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
கண் ஆரோக்கியத்திற்கு நல்லது:
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது கண் பார்வைக்கு ரொம்பவே நல்லது. மங்களான பார்வை, இரவு குருட்டுத்தன்மை போன்ற பிற கண் பிரச்சனைகளை குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது. எனவே இதை தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மேம்படும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்:
சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் சாப்பிடாமல் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கறிவேப்பிலை உதவுகிறது. இதில் இருக்கும் பண்புகள் ரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்தி கிடந்து மேலும் உடலில் இன்சின் அளவை சமன் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை பெரிதும் குறைக்க உதவுகிறது.
செரிமானத்தை பலப்படுத்தும்:
கறிவேப்பிலையில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் அமிலத்தன்மை, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே தினமும் காலை வெறும் வயிற்றில் கருவேப்பிலை மென்று சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுத்தமாகி செரிமானத்தை மேம்படுத்த செய்யும்.
இதையும் படிங்க: கடையில் வாங்கி 'கறிவேப்பிலை' சமைக்குறீங்களா? அதை பற்றி இந்த 'முக்கியமான' விஷயம் தெரியுமா?
தலைமுடிக்கு நல்லது;
கறிவேப்பிலையில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் புரோட்டின் தலைமுடியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதனால் உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
இதயத்திற்கு நல்லது:
கறிவேப்பிலையில் இருக்கும் ஆன்டிஆக்சிடன்ட் பண்புகள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
எப்படி சாப்பிடுனும்?
தினமும் காலை வெறும் வயிற்றில் 5-7 கறிவேப்பிலையை கழுவி நன்றாக மென்று சாப்பிடுங்கள். இல்லையெனில் கறிவேப்பிலை சாறு குடியுங்கள். இப்படி தொடர்ந்து சாப்பிட்டால் சில நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: வெறும் கறிவேப்பிலையா? நெல்லிக்காய் கூட ஜூஸ் குடிச்சு பாருங்க.. எண்ணிலடங்கா நன்மைகள்!!