வெறும் கறிவேப்பிலையா? நெல்லிக்காய் கூட ஜூஸ் குடிச்சு பாருங்க.. எண்ணிலடங்கா நன்மைகள்!!
Amla And Curry Leaves Juice Benefits: தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் மற்றும் கறிவேப்பிலை ஜூஸ் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.
நம்மில் பெரும்பாலானோர் காலை டீ அல்லது காபியுடன் தங்களது நாளை தொடங்குவார்கள். ஆனால் ஆரோக்கியமான பானத்துடன் காலை தொடங்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுவும் குறிப்பாக, காலையில் ஏதாவது ஒரு ஜூஸூடன் நாளை தொடங்குவது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில், சிலர் காலையில் ஏதாவது ஒரு பழத்தின் ஜூஸ் குடிப்பார்கள். இன்னும் சிலரோ காய்கறி ஜூஸ் குடிப்பார்கள். இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், நீங்கள் எவதாவது காலையில் கறிவேப்பிலையுடன் நெல்லிக்காய் சேர்த்து ஜூஸ் செய்து கொடுத்திருக்கிறீர்களா? தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்தால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது தெரியுமா? எனவே இந்த பதிவில் கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை தயாரிக்கும் முறை பற்றியும் பார்க்கலாம்.
இதையும் படிங்க: கடையில் வாங்கி 'கறிவேப்பிலை' சமைக்குறீங்களா? அதை பற்றி இந்த 'முக்கியமான' விஷயம் தெரியுமா?
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே, இவை இரண்டையும் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் இங்கே..
1. எடையை குறைக்க உதவும் :
இந்த ஜூஸில் உடலில் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டும் கலவைகள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கலோரிகளை எரித்து, உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது.
2. நச்சுக்களை நீக்கும் :
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காயில் இருக்கும் பண்புகள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே, இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்களை சுலபமாக வெளியேற்ற உதவுகிறது.
3. சருமம் மற்றும் முடிக்கு நல்லது :
நெல்லிக்காயில் மற்றும் கறிவேப்பிலை இவை இரண்டிலும் இருக்கும் பண்புகள் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. எனவே, இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
4. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதுபோல கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும் சத்துக்கள் உள்ளன. இவை எனவே இவை இரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் வராது.
5. செரிமானத்தை மேம்படுத்தும் :
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அதை செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் வாயு வீக்கம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
இதையும் படிங்க: தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா?!
பிற நன்மைகள் :
- பிபி கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
- இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.
- உடலில் ரத்தம் குறையாமல் தடுக்கும் மற்றும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
கறிவேப்பிலை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் - 2
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 1 கிளாஸ்
செய்முறை:
முதலில் நெல்லிக்காயில் இருக்கும் கொட்டையை நீக்கி அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதுபோல கறிவேப்பிலையையும் காம்பை நீக்கிக் கொள்ளுங்கள். இப்போது இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு மையாக அரைக்கவும். மேலும் இதனுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இப்போது இதை வடிக்கட்டி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி குடிக்கவும்.