MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கடையில் வாங்கி 'கறிவேப்பிலை' சமைக்குறீங்களா? அதை பற்றி இந்த 'முக்கியமான' விஷயம் தெரியுமா? 

கடையில் வாங்கி 'கறிவேப்பிலை' சமைக்குறீங்களா? அதை பற்றி இந்த 'முக்கியமான' விஷயம் தெரியுமா? 

Curry Leaf Cleaning Tips : கடையில் வாங்கும் கறிவேப்பிலையை சமைப்பதற்கு முன்பாக என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 09 2024, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Curry Leaf Cleaning Tips In Tamil

Curry Leaf Cleaning Tips In Tamil

இந்தியாவின் சமையலில் கறிவேப்பிலைக்கும் முக்கிய பங்கு உண்டு. பல குழம்பு வகைகளில் தாளிப்பிற்கு கறிவேப்பிலையை பயன்படுத்துகிறோம். எல்லோர் வீட்டு சமையலறைகளிலும் தவறாமல் இடம்பெறும் இலைகளில் கறிவேப்பிலையும் ஒன்று. பொதுவாக சமையலில் கறிவேப்பிலையை வாசனைக்காக சேர்ப்பார்கள். இது தவிர கருவேப்பிலையில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Curry Leaf Cleaning Tips In Tamil

Curry Leaf Cleaning Tips In Tamil

கறிவேப்பிலையில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்துள்ளன. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும், நார்ச்சத்து, அமினோ அமிலங்கள், க்ளைகோசைடுகள் போன்றவையும் கறிவேப்பிலையின் காணப்படும் பிற அத்தியாவசிய சத்துக்களாகும். நாள்தோறும் உணவில் கறிவேப்பிலையை சேர்த்து உண்பதால் கார்பசோல் என்ற ஆல்கலாய்கள் நமக்கு கிடைக்கின்றன. இவை செல்களில் ஏற்படும் ப்ரீ ரேடிக்கல் பாதிப்பை குறைத்து புற்றுநோயிலிருந்து நம்மை காக்கிறது. 

இதையும் படிங்க:  தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடிச்சா இவ்வளவு நன்மைகளா?!

35
Curry Leaf Cleaning Tips In Tamil

Curry Leaf Cleaning Tips In Tamil

கறிவேப்பிலைகளை பொடி செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து நாள்தோறும் அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகமாகும் என சித்த மருத்துவம் சொல்கிறது.  கறிவேப்பிலையில் குடல் இயக்கத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. இதனால் குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கூட குறையலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தன்னகத்தை கொண்டுள்ள கறிவேப்பிலைகளை சமைக்கும் முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.  

பொதுவாக கறிவேப்பிலைகளை பலர் கடைகளில் இருந்து தான் வாங்குகிறார்கள். இப்படி கடைகளில் விற்கப்படும் கறிவேப்பிலைகளில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டிருக்கும்.  அவற்றை சமைக்கும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என இங்கு காணலாம். 

இதையும் படிங்க: முடி பிரச்சினை மட்டுமா? இதயம் முதல் செரிமானம் வரை எல்லா பிரச்சினைக்கும் ஒரே தீர்வு - கறிவேப்பிலை

45
Curry Leaf Cleaning Tips In Tamil

Curry Leaf Cleaning Tips In Tamil

கறிவேப்பிலையை எப்படி சமைக்க வேண்டும்? 
  
கடைகளில் வாங்கும் கறிவேப்பிலைகளில் அழுக்கு, தூசி போன்றவை படிந்திருக்கும். அதில் பல கிருமிகள் கூட இருக்கலாம்.  அதனால் கறிவேப்பிலையை சமைப்பதற்கு பயன்படுத்துவதற்கு முன்பாக நன்கு கழுவு வேண்டும். நீங்கள் கழுவும் நீரில் கல் உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. நீங்கள் கறிவேப்பிலைகளை  ஃப்ரிட்ஜில் சேமித்து வைப்பவராக இருந்தால், அதனை கழுவியப் பின்னர் ஈரப்பதம் நீங்கும் அளவிற்கு உலரவிட்டு பின்னர் பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்கலாம். 

கறிவேப்பிலைகளை முறையாக கழுவுவது அதில் படிந்துள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளில் படிவுகளை நீக்க உதவுகிறது. இப்படி கழுவி பயன்படுத்துவதால் கறிவேப்பிலை இலைகளின் மீது இருக்கும் ரசாயனங்களை நீக்க முடியும். கறிவேப்பிலைகளை கழுவுவதால் பாக்டீரியா, பூஞ்சை ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்கலாம். கறிவேப்பிலைகளில் வாழும் லார்வாக்கள், பூச்சியின் முட்டைகள் ஆகிவற்றை நீக்க கண்டிப்பாக கழுவ வேண்டும். 

55
Curry Leaf Cleaning Tips In Tamil

Curry Leaf Cleaning Tips In Tamil

எப்படி கழுவலாம்? 

கறிவேப்பிலை இலைகளை உப்புநீரில் (ஒரு லிட்டர் நீருக்கு  1 டீஸ்பூன் உப்பு) 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் குளிர்ந்த ஓடும் நீரில் கழுவலாம். குழாயில் வரும் நீரில் கழுவுவது நல்லது. சுத்தமான துணி அல்லது காகித துண்டு வைத்து அவற்றை விரைவில் உலர வைக்கலாம். 

பாரம்பரியமாகவே இந்தியாவில் சில நடைமுறைகள் உள்ளன. ஆயுர்வேதம் எந்த இலையாக  இருந்தாலும், பயன்படுத்தும்  முன் அவற்றை கழுவுவதை வலியுறுத்துகின்றது. அப்படிதான், கறிவேப்பிலையும் சமைக்கும் முன் கழுவப்படுகிறது. பின்னர் அந்த ஈரம் உலர்த்தப்பட்டு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. 

பொதுவாக கடைகளில் கறிவேப்பிலையை வாங்குவதை விடவும் வீடுகளில் உள்ள கறிவேப்பிலைகளை பயன்படுத்துவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.  அதனால் உங்கள் வீட்டில் இடமிருந்தால் சிறிய கறிவேப்பிலை செடியை நட்டு வைத்து வளருங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved