- Home
- உடல்நலம்
- பாலில் நெய்!! இந்த காம்போ அள்ளித் தரும் நன்மைகள் தெரியுமா? குழந்தைகளுக்கு கண்டிப்பா கொடுங்க!!
பாலில் நெய்!! இந்த காம்போ அள்ளித் தரும் நன்மைகள் தெரியுமா? குழந்தைகளுக்கு கண்டிப்பா கொடுங்க!!
பாலிக் நெய் கலந்து குடித்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

Benefits of Milk and Ghee Combination
பால், நெய் ஆகிய இரண்டும் தனித்தனியாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. இது இரண்டும் சேரும்போது இன்னும் கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. பாலில் இரும்புச்சத்து, புரதச்சத்து போன்ற சத்துக்களும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய தாதுக்களும் வைட்டமின்கள் ஏ,டி, பி-6, ஈ, கே ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இதில் இருக்கும் கொழுப்பு பசு மற்றும் எருமை பாலுக்கு ஏற்றபடி மாறலாம். நெய்யில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே ஆகியவை உள்ளன. நல்ல கொழுப்புகளுக்கு நெய் உண்ணலாம். இந்த பதிவில் ஏன் பாலுடன் நெய் கலந்து குடிக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
எடை அதிகரிக்குமா?
எந்த உணவுமே அளவாக உண்ணும்போது எடையை அதிகரிப்பதில்லை. எடை குறைக்க நினைத்தால் நெய் 1/2 டீஸ்பூன் போதுமானது. படிப்படியாக அதிகரிக்கலாம். ஆனால் 2 டீஸ்பூனுக்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம். கூடுதலாகும்போது அதிக கலோரிகள் காரணமாக எடை அதிகரிக்கலாம். நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உங்களுடைய பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் திருப்தியாக உணர்வீர்கள். நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை குறைப்பதற்கு நெய் சிறந்த மூலமாக இருக்கும். நெய்யை பாலுடன் எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும்.
எலும்பு ஆரோக்கியம்
பாலில் காணப்படும் கால்சியம் சத்தானது எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் டி நெய்யோடு இணையும் போது கால்சியத்தின் உறிஞ்சுதல் அதிகமாகும். இதனால் எலும்புகளுக்கு தேவையான கால்சியம், வைட்டமின் டி ஆகியவை கிடைக்கிறது. மூட்டு வீக்கத்தை குறைக்கும்.
நோயெதிர்ப்பு மண்டலம்
பால், நெய் ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க நாட்டு பசுமாட்டு நெய் உதவுகிறது. இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. பொதுவாக நோய் எதிர்ப்பு மண்டலம் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்போது பலவீனமாகும். நெய்யும், பாலும் குடலுக்கு சிறந்தவை என்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கும் அவை ஏற்றதாக அமைகிறது.
சரும ஆரோக்கியம்
சரும வறட்சி, பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளுக்கு நெய்யும், பாலும் சிறந்த பலனளிக்கும். இவை இரண்டும் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இதனால் சருமம் இழந்த பொழிவை மீண்டும் கொண்டுவர உதவுகிறது. சரும ஆரோக்கியத்திற்காக பாலும், நெய்யும் எடுத்துக் கொள்பவர்கள் அதனுடன் சிறிதளவு மஞ்சள் கலந்து அருந்தலாம். இதனால் தோல் ஆரோக்கியம் மேம்படும்.
குந்தைகளுக்கு பாலில் நெய்!
நாட்டு பசு நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளுடைய மூளை வளர்ச்சியை ஆதரிக்கின்றன. பாலில் உள்ள வைட்டமின்கள் அவர்களுடைய எலும்பு, பற்களை வலுவாக்க உதவும். காலையில் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு சிறந்த சிற்றுண்டியாகவும் இருக்கும். பள்ளியில் சுறுசுறுப்பாக இருப்பார்கள்..

