- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
குளிரால் வறண்டு போன முகத்தை நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் மாற்ற பப்பாளியை பயன்படுத்துவது எப்படியென்று இங்கு பார்க்கலாம்.

Papaya Face Pack for Dry Skin in Winter
நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வருகிறது. இந்த குளிரைத் தாங்குவது அவ்வளவு எளிதல்ல. குளிரைத் தாங்க ஸ்வெட்டர்கள், ஸ்வெட் ஷர்ட்கள் போன்ற சூடான ஆடைகளை அணிகிறோம். இவை உடலுக்கு கதகதப்பைத் தரும், ஆனால் குளிரால் சருமம் பாதிக்கப்படும். குளிர் காற்றால் சருமம் விரைவில் வறண்டுவிடும். எத்தனை கிரீம்கள், மாய்ஸ்சரைசர்கள் பயன்படுத்தினாலும், முகம் முன்போல் அழகாக இருக்காது. ஆனால், ஒரே ஒரு ஃபேஸ் பேக் மூலம் உங்கள் அழகை இரட்டிப்பாக்கலாம். அது என்ன? அதை முகத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று இப்போது தெரிந்து கொள்வோம்...
பப்பாளியில் இருக்கும் சத்துக்கள்:
பப்பாளியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்திற்கு நல்ல பொலிவைத் தருகிறது. வைட்டமின் ஏ சருமத்தை தழும்புகள் இல்லாமல் மென்மையாக்க உதவுகிறது. வைட்டமின் ஈ வயதான தோற்றத்தை தடுத்து, சுருக்கங்கள் வராமல் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
குளிர்காலத்தில் பப்பாளி எப்படி வேலை செய்கிறது?
குளிர்காலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் குறைவதால் சருமம் வறண்டு காணப்படும். முகத்தில் வெள்ளை திட்டுகள் தோன்றுவது, உதடுகள் அதிகமாக வெடிப்பது போன்றவை ஏற்படும். இவை அனைத்தையும் குறைக்க பப்பாளி பெரிதும் உதவுகிறது. இந்த பருவத்தில் பப்பாளி ஒரு சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதன் மூலம் வறண்ட சரும பிரச்சனையை குறைக்கலாம்.
பப்பாளியை முகத்தில் எப்படி பயன்படுத்தனும்?
ஒரு கிண்ணத்தில் பழுத்த பப்பாளி கூழ், இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஃபேஸ் பேக்கை தயார் செய்யவும். பிறகு முகத்தை சுத்தமான நீரில் கழுவி, தயாரித்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து முகத்தை நீரால் கழுவினால் போதும். வாரத்திற்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தினால், உங்கள் முகம் பொலிவாகவும், அழகாகவும் காணப்படும்.

