- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க
பொடுகை நிரந்தரமாக போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தும் முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Aloe Vera For Dandruff
தற்போது ஆண், பெண் இருவரும் தலைமுடி பராமரிப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் பலரும் அனுபவிக்கும் பிரச்சனை எதுவென்றால் முடி உதிர்தல், பொடுகு தொல்லை போன்றவைகள் அடங்கும். பொடுகை போக்க ரசாயனம் கலந்த ஷாம்புவை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை முறையில் சரி செய்து விடலாம். இதற்கு உங்களுக்கு கற்றாழை ஜெல் உதவும். பொடுகை நிரந்தரமாக போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தும் முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழை ஜெல் :
உச்சந்தலையில் இருக்கும் பூஞ்சைகளை எதிர்த்தும் போராடும் தன்மை கற்றாழை ஜெல்லுக்கு உள்ளது. எனவே நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை உச்சந்தலையில் நன்கு தடவி சிறிது நேரம் வைத்து விட்டு பிறகு குளிக்கவும் இப்படி செய்து வந்தால் பொடுகு நிரந்தரமாக நீங்கிவிடும். முடி உதிர்தலும் குறையும்.
கற்றாழை ஜெல் மற்றும் டீ-ட்ரீ ஆயில் :
டீ-ட்ரீ ஆயிலில் இருக்கும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் பொடுகை நிரந்தரமாக போக்க உதவுகிறது. இதற்கு 3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 5-7 துளிகள் டீ-ட்ரீ ஆயிலை சேர்த்து நன்கு கலந்து இரவு தூங்கு முன் உச்சந்தலையில் தடவி பிறகு மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.
கற்றாழை ஜெல் மற்றும் வேப்ப எண்ணெய் :
வேப்ப எண்ணெயில் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையில் இருக்கும் தொற்றுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதற்கு 3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 10 துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அதை உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு கெமிக்கல் இல்லாத ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்து வந்தால் பொடுகு விரைவில் நீங்கும்.
கற்றாழை ஜெல் மற்றும் எலுமிச்சை சாறு :
எலுமிச்சையில் இருக்கும் அசிட்டிக் பண்பு உச்சந்தலையில் பொடுகை ஏற்படுத்தும் கிருமியை அழிக்க உதவுகிறது இதற்கு 3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை உச்சந்தலையில் தடவி சுமார் 20 ஊற வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.

