Aloe Vera Gel : கற்றாழை ஜெல்லுக்கு இப்படி ஒரு பவரா?! முகத்துக்கு வேற எதுவும் வேணாம்
சரும ஆரோக்கியத்திற்கு கற்றாழை ஜெல் என்னென்ன அற்புதங்களை செய்யும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Aloe Vera Gel
சரும அழகு பராமரிப்பில் கற்றாழை ஜெல்லிற்க்கு தனி சிறப்பு இடமுண்டு. கற்றாழை ஜெல் நம்முடைய சருமத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இதில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு இரசாயனங்களும் இல்லை. முற்றிலும் இயற்கையானது. முகப்பருக்களை குறைப்பது முதல் சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பது வரை என சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும். சரி இப்போது இந்த பதிவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முகத்திற்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் :
சருமத்தை உரிக்கும் : கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும். இறந்த செல்களை நீக்கு முகப்பருக்கள் வராமல் தடுக்கும்.
சருமத்தை ஈரப்பதமாக்கும் : கற்றாழை ஜெல் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். மென்மையாகவும் மாற்றும்.
முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் :
தற்போது இளம் வயதிலேயே பலருக்கு முகத்தில் சுருக்கங்கள் வருகிறது. கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி வந்தால் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். மேலும் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். உங்களது முகத்தில் ஏற்கனவே சுருக்கங்கள் இருந்தால் வாரத்திற்கு 1-2 முறை கற்றாழை ஜெல்லை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் சுருக்கங்கள் குறைய ஆரம்பிக்கும்
முகப்பருக்களை குறைக்கும் ;
கற்றாழை ஜெல்லில் இருக்கும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் முகப்பருகளை குறைக்கும். மேலும் பருக்களால் ஏற்படும் தழும்புகள், சிவத்தல், கரும்புள்ளிகளை குறைக்கும். இது தவிர சரும அரிப்பு மற்றும் தீக்காயங்களையும் குணப்படுத்தும்.
கற்றாழை ஜெல்லை யார் பயன்படுத்தக் கூடாது?
- சருமத்தில் காயம் ஆழமாக இருப்பவர்கள் கற்றாழை ஜெல் பயன்படுத்தவே கூடாது.
- கற்றாழை ஜெல் ஒவ்வாமை உள்ளவர்கள் அதை தவிர்ப்பது நல்லது.
- இது தவிர சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டு தாய்மார்களும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த வேண்டாம்.