MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வீட்டில் வயதான பெற்றோர் இருக்கிறார்களா? இந்த 6 விஷயங்களை இப்போதே பண்ணுங்க!

வீட்டில் வயதான பெற்றோர் இருக்கிறார்களா? இந்த 6 விஷயங்களை இப்போதே பண்ணுங்க!

வயதாகும் போது பெற்றோர் நம்மிடம் எதிர்பார்ப்பது பணத்தையோ வசதியையோ அல்ல; பாதுகாப்பையும் கொஞ்சம் அக்கறையையும் மட்டும் தான். உங்கள் வீட்டில் வயதான பெற்றோர் இருந்தால், அவர்களின் அன்றாட வாழ்க்கையை இன்னும் அழகாக்க இந்த 6 எளிய விஷயங்களை உடனே செய்யுங்க!

1 Min read
Author : Priya Velan
Published : May 19 2026, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வழுக்கும் தரைக்கு குட்பை
Image Credit : Getty

வழுக்கும் தரைக்கு குட்பை

வயதானவர்கள் வீட்டில் கீழே விழும் 80% விபத்துகள் பாத்ரூமில்தான் நடக்கின்றன. உடனடியாக 'Anti-skid' எனப்படும் வழுக்காத மேட்களை போடுங்கள். சுவர்களில் பிடித்துக் கொள்ள ஏதுவாக 'Grabbing Bars' (கைப்பிடிகள்) பொருத்துங்கள். இது அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
அவர்களுக்கும் ஒரு 'ஸ்மார்ட்' உலகம் இருக்கு!
Image Credit : Getty

அவர்களுக்கும் ஒரு 'ஸ்மார்ட்' உலகம் இருக்கு!

ஸ்மார்ட்போனில் அவர்களுக்குப் பிடித்த பழைய பாடல்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் அல்லது காமெடி வீடியோக்களை 'Favorites' ஆக செட் செய்து கொடுங்கள். தூரத்து உறவினர்களிடம் பேச வாட்ஸ்அப் வீடியோ காலைக் கற்றுக் கொடுங்கள். இது அவர்களின் தனிமையைப் போக்கும் ஆகச்சிறந்த மருந்து!

Related Articles

Related image1
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Related image2
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
36
மருந்துப் பெட்டி ரகசியம்!
Image Credit : Getty

மருந்துப் பெட்டி ரகசியம்!

நாட்குறிப்புடன் கூடிய ஒரு 'Weekly Pill Organizer' (வாராந்திர மாத்திரை பெட்டி) வாங்கி, ஞாயிற்றுக்கிழமையே அந்த வாரத்திற்கான மாத்திரைகளைத் தனித்தனியாகப் பிரித்து வைத்து விடுங்கள். இதனால் மாத்திரை மாற வாய்ப்பே இல்லை, அவர்களும் நிம்மதியாக இருப்பார்கள்.

46
'நோ' சொல்லாதீங்க!
Image Credit : Getty

'நோ' சொல்லாதீங்க!

ஒரே கதையை தாத்தா, பாட்டி பத்து முறை சொன்னாலும், சலிக்காமல் புதுசு போல் கேளுங்கள். வயதான காலத்தில் அவர்களுக்குப் பேச்சுத் துணைதான் பெரிய பலம். "எனக்குத் தெரியும், இதையே எத்தனை தடவை சொல்வ?" என்று குறுக்கே பேசாமல், புன்னகையோடு காது கொடுத்துக் கேளுங்கள்.

56
இருட்டு பயத்தை விரட்டுங்கள்!
Image Credit : Getty

இருட்டு பயத்தை விரட்டுங்கள்!

வயதான காலத்தில் கண்பார்வை மங்கும். இரவு நேரத்தில் அவர்கள் எழுந்து தண்ணீர் குடிக்கவோ, கழிவறை செல்லவோ தடுமாறலாம். எனவே, படுக்கையறையிலும், ஹாலிலும் லேசான வெளிச்சம் தரும் 'Night Foot-lamps' அல்லது மோஷன் சென்சார் (Motion Sensor) விளக்குகளைப் பொருத்துங்கள்.

66
அவர்களையும் குடும்ப முடிவுகளில் சேருங்கள்!
Image Credit : Getty

அவர்களையும் குடும்ப முடிவுகளில் சேருங்கள்!

வீட்டிற்குப் புதுப் பொருள் வாங்குவது முதல் குடும்ப விசேஷங்கள் வரை எல்லாவற்றிலும், "உங்க கருத்து என்னப்பா?" என்று ஒரு வார்த்தை கேளுங்கள். நாம் இன்னும் இந்த வீட்டிற்குத் தேவைப்படுகிறோம் என்ற எண்ணம், அவர்களை இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வைக்கும்!

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Diabetes: இந்த சீக்ரெட் பொடியை மோரில் சேர்த்துக் குடித்தால் சர்க்கரை நோய் காணாமல் போகும்.!
Recommended image2
வீட்டில் தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி வந்தால் முதலில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
Recommended image3
High BP ஹை பீபி இருக்கா? இந்த 5 தவறுகளை மட்டும் கண்டிப்பாக செய்யாதீங்க
Related Stories
Recommended image1
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image2
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved