தலையின் நடுவே க்யூட் முடிச்சு கொண்ட இந்த ஹேர்பேண்ட், ஜீன்ஸ், டி-சர்ட், சம்மர் டிரஸ் போன்ற கேஷுவல் உடைகளுக்குப் பக்காவாக பொருந்தும். காலேஜ் பெண்களுக்கு இது ஒரு பெஸ்ட் சாய்ஸ்!
தலைமுடியை பின்னி வைத்தது போன்ற தோற்றத்தை தரும் துணியால் ஆன ஹேர்பேண்ட்கள் தான் இந்த பிரைடட் ஹேர்பேண்ட்ஸ். குர்தா மற்றும் எத்னிக் (Ethnic) உடைகளுக்கு இது மிக அழகாக பொருந்தும்.
ஒவ்வொரு பெண்ணும் ஒரு இளவரசியே! அதை வெளிப்படுத்தவே இந்த தியாரா ஹேர்பேண்ட். மெட்டல் மற்றும் கற்கள் பதித்த இது, உங்களை திருமண வரவேற்பு அல்லது பிறந்தநாள் விழாக்களில் தனித்து காட்டும்.
பளபளக்கும் கற்கள், மணிகள், ஜரிகை கொண்ட இந்த ஹேர்பேண்ட்கள் பட்டுப்புடவை, லெஹெங்காவிற்கு நகையாய் ஜொலிக்கும். பண்டிகைகளில் உங்கள் ஆடம்பர தோற்றத்திற்கு இதுவே போதும்!
பெரிய ரிப்பன் அல்லது போ (Bow) வடிவம் கொண்ட ஹேர்பேண்ட்கள் எப்போதும் ஃபேஷனை விட்டு போகாது. இது உங்களுக்கு ஒரு க்யூட்டான, ரெட்ரோ (Retro Style) தோற்றத்தை கொடுக்கும்.
கோடைக்கு ஏற்ற பிரிண்டட் ஹெட்ராப்ஸ்! மலர் டிசைன் கொண்ட இந்த துணி பேண்ட்கள் தலைமுடியைக் கலையாமல் காப்பதுடன், அட்டகாசமான மாடர்ன் லுக்கையும் தரும்.
மெட்டாலிக் ஷேப் கிளிப்ஸ் இப்போது இன்ஸ்டாவில் ட்ரெண்ட்! சைடு பார்ட்டிஷன் எடுத்து இதை வைத்தால் பார்க்க சிம்பிளாகவும் செம்ம ஸ்டைலாகவும் இருக்கும்.
பெரிய, சிறிய வெள்ளை முத்துக்கள் பதித்த இந்த ஹேர் கிளிப்புகள் பக்கவாட்டு கூந்தலுக்கு கச்சிதமானவை. இது ஃபார்மல், செமி-ஃபார்மல் உடைகளுக்கு மிக அழகாக பொருந்தும்.
கற்கள் பதித்த உங்கள் பெயர் அல்லது LOVE, BOSS, QUEEN போன்ற வார்த்தைகள் கொண்ட ஹேர் பின்கள்! உங்களது தனித்துவமான ஸ்டைலை வெளிப்படுத்த இது ஒரு சூப்பர் வழி!
முத்து ஹேர்பேண்ட் பார்ட்டி மற்றும் வெஸ்டர்ன் உடைகளுக்கு கம்பீரமான, நேர்த்தியான தேர்வு. கூந்தலை ஃப்ரீ ஹேர் விட்டு இதனை அணிந்தால், தோற்றம் மிக எலிகண்ட்டாக மாறும்.