MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Avoid food : உங்களுக்கு 30 வயசாச்சா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க!

Avoid food : உங்களுக்கு 30 வயசாச்சா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க!

Avoid food After 30: 30 வயதுக்கு பிறகு எல்லா உணவுகளையும் முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால் அதிக சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைப்பது நல்லது.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 28 2026, 05:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உடல் ஆரோக்கியம் பாதுகாக்கும் உணவுப் பழக்கம்
Image Credit : magnific

உடல் ஆரோக்கியம் பாதுகாக்கும் உணவுப் பழக்கம்

30 வயதை கடந்த பிறகு, முன்பு போல எதை சாப்பிட்டாலும் உடம்பு சமாளித்துவிடும் என்று நினைக்கக்கூடாது. வயது கூடக் கூட உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதய ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக பிடித்த உணவுகள் எல்லாத்தையும் ஒரேயடியாக நிறுத்த வேண்டும் என்று இல்லை. ஆனால், அதிக சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதை குறைப்பது நல்லது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சர்க்கரை மற்றும் ஜூஸ் வகைகள்
Image Credit : magnific

சர்க்கரை மற்றும் ஜூஸ் வகைகள்

சர்க்கரை அதிகம் உள்ள காபி, டீ, குளிர்பானம், எனர்ஜி டிரிங்க்ஸ் மற்றும் ஜூஸ்களை அடிக்கடி குடிப்பதை தவிர்க்கவும். அதிக சர்க்கரை தேவையற்ற கலோரிகளை அதிகரித்து உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும். மேலும், சர்க்கரை தோலில் collagen-உடன் இணைந்து தோல் சுருக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

தினசரி Free Sugar 10%க்கும் குறைவாக இருக்க வேண்டும் என World Health Organization (WHO) பரிந்துரைக்கிறது. இதுபோன்ற இனிப்பு பானங்களுக்குப் பதிலாக எலுமிச்சை ஜூஸ் (சர்க்கரை இல்லாமல்), இளநீர் போன்றவற்றை குடிக்கலாம்.

Related Articles

Related image1
gut health: தசை மீட்பு முதல் குடல் ஆரோக்கியம் வரை பால் உணவுகள் தரும் முக்கிய நன்மைகள்
Related image2
Expensive Salt: தங்கம் விலையில் விற்கப்படும் உப்பு! ஒரு கிலோ வாங்கினா ஒரு பவுன் நகை வாங்கலாம்!
35
அதிக உப்பு உள்ள உணவுகள்
Image Credit : magnific

அதிக உப்பு உள்ள உணவுகள்

சிப்ஸ், ஸ்நாக்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட இறைச்சி போன்றவற்றில் உப்பு அதிகமாக இருக்கும். இது போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் உப்பை கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

WHO பரிந்துரைப்படி, பெரியவர்கள் தினமும் 5 கிராமுக்கும் குறைவாக உப்பு எடுத்துக்கொள்வது நல்லது. இதுபோன்ற ஸ்நாக்ஸுக்குப் பதிலாக வேகவைத்த கடலை வகைகள், முழுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் பழங்களை சாப்பிடலாம்

45
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
Image Credit : magnific

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இறைச்சியை முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை (processed meat) அதிகமாக சாப்பிடுவதை குறைத்து, மீன், முட்டை, பயறு மற்றும் பருப்பு போன்ற பல்வேறு புரத உணவுகளை சாப்பிடலாம்.

55
பொரித்த உணவுகள்
Image Credit : magnific

பொரித்த உணவுகள்

வடை, பஜ்ஜி, சமோசா, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற டீப்-ஃப்ரைட் உணவுகள் மற்றும் சில பேக்கரி உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால், கெட்ட கொழுப்பு (LDL) அதிகரித்து, நல்ல கொழுப்பு (HDL) குறையலாம். இதனால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதேபோல், பிரட், மைதா பரோட்டா, பூரி, பாஸ்தா, பிஸ்கட் போன்றவை விரைவாக சர்க்கரையாக மாறி, பசியைத் தூண்டி தொப்பை கொழுப்பு சேர உதவும். எனவே இது போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஏன் 30 வயதில் இது முக்கியம்?

30 வயதிற்குப் பிறகு வளர்சிதை மாற்றம் (metabolism) இயல்பாகவே மெதுவாகிறது. இதனால், இரத்த அழுத்தம், LDL கொழுப்பு, இரத்த சர்க்கரை போன்றவை படிப்படியாக உயரத் தொடங்கும்.எனவே, சில உணவுகளைத் தவிர்ப்பது உடல் எடை, இதயம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் தோல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

முக்கியமாக உணவுப் பொட்டலங்களின் பின்னால் உள்ள ஊட்டச்சத்து விவரப் பட்டியலைப் (Nutrition Facts) படித்து, சோடியம், சர்க்கரை மற்றும் டிரான்ஸ் கொழுப்பு குறைவாக உள்ள பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

About the Author

V
Vishnupriya
சுகாதார நன்மைகள்
உடல் அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Make Soft Juicy Chicken Kebabs: தந்தூரி இல்லாமல் பஞ்சு போன்ற சிக்கன் கபாப்! 20 நிமிடத்தில் ரெடியாகும் சீக்ரெட்.!
Recommended image2
Blood Sugar: இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கும் 7 சூப்பர் உணவுகள்!
Recommended image3
Hair Fall: முடி உதிர்வதைத் தடுக்கும் 5 வகை எண்ணெய்கள்... இதோ லிஸ்ட்!
Related Stories
Recommended image1
gut health: தசை மீட்பு முதல் குடல் ஆரோக்கியம் வரை பால் உணவுகள் தரும் முக்கிய நன்மைகள்
Recommended image2
Expensive Salt: தங்கம் விலையில் விற்கப்படும் உப்பு! ஒரு கிலோ வாங்கினா ஒரு பவுன் நகை வாங்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved