MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Sweet Potato Paneer Paniyaram : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம்..இனிப்பும் காரமும் கலந்த சூப்பர் சுவை!

Sweet Potato Paneer Paniyaram : சர்க்கரைவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம்..இனிப்பும் காரமும் கலந்த சூப்பர் சுவை!

Sweet Potato Paneer Paniyaram : சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பன்னீர் சேர்த்து சுவையான பஞ்சுபோன்ற பணியாரம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். மாலை நேர ஸ்நாக்ஸாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இந்த ரெசிபியின் செய்முறை இதோ.

3 Min read
Author : Vishnupriya
Published : Nov 18 2026, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம்
Image Credit : This is a representative image generated using Gemini AI

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம்

மாலை நேரத்தில் குழந்தைகள் ஏதாவது வித்தியாசமாகச் சாப்பிட வேண்டும் என்று கேட்கிறார்களா? வழக்கமாகச் செய்யும் பணியாரத்தையே கொஞ்சம் புதுமையாகவும், சத்தானதாகவும் மாற்றினால் எப்படி இருக்கும்? வீட்டில் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பன்னீர் ஆகியவற்றை வைத்து பஞ்சுபோன்ற சுவையான பணியாரம் செய்யலாம்.

இனிப்புச் சுவை கொண்ட சர்க்கரைவள்ளிக் கிழங்குடன், மென்மையான பன்னீர், காரசாரமான மசாலா கலவை என ஒவ்வொரு கடியிலும் அசத்தலான சுவை கிடைக்கும்.

குறிப்பாக, உள்ளே பன்னீர் கலவையும் வெளியே பணியார மாவும் சேர்ந்து தரும் இந்த காம்பினேஷன் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டியாக மட்டுமின்றி, காலை மற்றும் மாலை உணவாகவும் இதைச் செய்து அசத்தலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
சக்கரவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம் - தேவையான பொருட்கள்
Image Credit : This is a representative image generated using Gemini AI

சக்கரவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம் - தேவையான பொருட்கள்

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 நடுத்தர அளவு
  • துருவிய பன்னீர் - 1\2 கப்
  • தோசை மாவு - 1 கப்
  • வெங்காயம் - 1
  • பச்சை மிளகாய் - 2
  • இஞ்சி - 1 சிறிய துண்டு
  • கடுகு - 1\2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - 1\4 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் - 1\2 டீஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
313
சக்கரவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம் செய்முறை - படி 1
Image Credit : This is a representative image generated using Gemini AI

சக்கரவள்ளிக் கிழங்கு பன்னீர் பணியாரம் செய்முறை - படி 1

சர்க்கரைவள்ளிக் கிழங்கை தயார் செய்தல்

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். நன்கு வெந்ததும் ஆறவைத்து அதன் தோலை நீக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாக மசித்துக் கொள்ளவும்.

413
படி 2
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 2

பன்னீர் சேர்த்தல்

மசித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்குடன் துருவிய பன்னீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பன்னீர் இந்தப் பணியாரத்திற்கு கூடுதல் சுவையையும் மென்மையான தன்மையையும் கொடுக்கும்.

513
படி 3
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 3

தாளிப்பு தயாரித்தல்

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

613
படி 4
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 4

மசாலா கலவை

இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

713
படி 5
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 5

பூரணம் தயார் செய்தல்

இப்போது தயாரித்து வைத்துள்ள தாளிப்பு கலவையை மசித்து வைத்திருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பன்னீர் கலவையுடன் சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சைச் சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து கைகளால் நன்றாகப் பிசையவும்.

813
படி 6
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 6

உருண்டைகள் பிடித்தல்

தயார் செய்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். உருண்டைகள் அனைத்தும் ஒரே அளவில் இருந்தால் பணியாரம் சீராக வேகும்.

913
படி 7
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 7

பணியாரச் சட்டியில் மாவு ஊற்றுதல்

இப்போது குழிப் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் முதலில் ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் தோசை மாவை ஊற்றவும்.

1013
படி 8
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 8

பூரணம் வைத்து மூடுதல்

அதன் மீது ஏற்கெனவே பிடித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு பன்னீர் உருண்டையை வைக்கவும். பின்னர் அந்த உருண்டை முழுவதும் மூடும் வகையில் மீண்டும் சிறிதளவு தோசை மாவை மேலே ஊற்றவும்.

1113
படி 9
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 9

பணியாரம் வேகவைத்தல்

பணியாரச் சட்டியை மூடி வைத்து மிதமான தீயில் வேகவிடவும். சிறிது நேரம் கழித்து அடிப்பக்கம் வெந்ததும் பணியாரத்தை மெதுவாகத் திருப்பிப் போடவும். இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகவும் நன்றாகவும் வெந்ததும் அடுப்பிலிருந்து எடுத்து விடலாம்.

1213
படி 10
Image Credit : This is a representative image generated using Gemini AI

படி 10

சுவையான பணியாரம் தயார்

வெளிப்புறம் மென்மையாகவும், உள்ளே சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பன்னீர் கலவை நிறைந்ததாகவும் இருக்கும் சுவையான பணியாரம் தயார். இதனை காரச் சட்னி, தேங்காய் சட்னி அல்லது புதினா சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.

1313
பணியாரம் செய்வதற்கான முக்கிய குறிப்புகள்
Image Credit : This is a representative image generated using Gemini AI

பணியாரம் செய்வதற்கான முக்கிய குறிப்புகள்

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாக வேகவைத்து, அதில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை நீக்கிக் கொள்ளவும்.
  • பன்னீரை நன்றாகத் துருவிச் சேர்த்தால் பூரணம் மென்மையாக இருக்கும்.
  • பூரணக் கலவை மிகவும் தளர்வாக இருந்தால் உருண்டை பிடிக்கச் சிரமமாக இருக்கும். எனவே தேவையான அளவுக்கு மட்டும் பொருட்களைச் சேர்க்கவும்.
  • தோசை மாவு மிகவும் கெட்டியாகவோ அல்லது நீர்த்ததாகவோ இருக்கக்கூடாது.
  • பணியாரம் வெளியில் கருகாமல் உள்ளே நன்றாக வேக மிதமான தீயில் சமைக்கவும்.
  • பணியாரச் சட்டியில் அதிக எண்ணெய் ஊற்ற வேண்டியதில்லை. ஒவ்வொரு குழியிலும் சிறிதளவு எண்ணெய் போதுமானது.


குழந்தைகளுக்குச் செய்யும்போது பச்சை மிளகாய் மற்றும் மிளகுத்தூளின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். சூடாகச் சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(22.0 ov) 98 & 74/3
Day 2
Schedule ›
26th T20 • WBBLT20
HH-WHH-W
Thu, 19 Nov, 2026
PS-WPS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Banana Dosa : நெய் மணக்கும் வாழைப்பழம் தோசை.. கனிந்த வாழைப்பழத்தில் ருசியான ஸ்நாக்ஸ் செய்து பாருங்க!
Recommended image2
Healthy Tiffen box Recipe: குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்தி லஞ்ச் ரெசிபி; இந்த 10 டிஷ் ட்ரை பண்ணுங்க!
Recommended image3
Thanjavur Orappadai : தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை..மொறுமொறுப்பான சுவையில் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!
Related Stories
Recommended image1
Thanjavur Orappadai : தஞ்சாவூர் ஸ்பெஷல் ஒரப்படை..மொறுமொறுப்பான சுவையில் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!
Recommended image2
Banana Dosa : நெய் மணக்கும் வாழைப்பழம் தோசை.. கனிந்த வாழைப்பழத்தில் ருசியான ஸ்நாக்ஸ் செய்து பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved