MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Tender Coconut Halwa : இளநீர் வழுக்கையில் சூப்பரான அல்வா செய்யலாம்! டேஸ்ட் வேற ரகம்!

Tender Coconut Halwa : இளநீர் வழுக்கையில் சூப்பரான அல்வா செய்யலாம்! டேஸ்ட் வேற ரகம்!

Tender Coconut Halwa : இளநீர் குடித்துவிட்டு வழுக்கையைத் தூக்கிப் போடாதீங்க! அதைப் பயன்படுத்தி மென்மையான, சுவையான அல்வா செய்யலாம். வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கும் முறை இதோ!

3 Min read
Author : Arun Mozhi Varman
Published : Nov 06 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இளநீர் வழுக்கையில் அல்வாவா?
Image Credit : Asianet News

இளநீர் வழுக்கையில் அல்வாவா?

வெயில் காலத்தில் தாகம் தீர்க்க இளநீர் குடிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. இளநீரைக் குடித்துவிட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையைப் பலரும் அப்படியே தூக்கிப் போட்டுவிடுவார்கள். ஆனால், அந்த மென்மையான வழுக்கையைப் பயன்படுத்தி சுவையான அல்வா செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வழக்கமாக கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட பொருட்களை வைத்து அல்வா செய்வோம். ஆனால், இளநீர் வழுக்கை மற்றும் இளநீரைப் பயன்படுத்தியும் வித்தியாசமான சுவையில் அல்வா தயாரிக்க முடியும். இதை வீட்டிலேயே எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

இதையும் படிங்க : Protein : சைவ உணவில் புரதம் பெற சிறந்த பயறு எது? எந்தப் பயறில் எவ்வளவு புரதம்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இளநீர் அல்வா செய்யத் தேவையான பொருட்கள்!
Image Credit : Asianet News

இளநீர் அல்வா செய்யத் தேவையான பொருட்கள்!

இந்த அல்வாவை 4 முதல் 5 பேர் சாப்பிடும் அளவில் தயாரிக்கத் தேவையான பொருட்கள்:

  • இளநீர் வழுக்கை – 2 இளநீரில் கிடைக்கும் அளவு (சுமார் 1 கப்)
  • இளநீர் – 1½ கப்
  • சோள மாவு – ¾ கப்
  • சர்க்கரை – 1½ கப்
  • நெய் – 4 மேசைக்கரண்டி
  • ஏலக்காய்த்தூள் – ¼ தேக்கரண்டி
  • முந்திரி – 10
  • உப்பு – ஒரு சிறிய சிட்டிகை (விருப்பப்பட்டால்)

குறிப்பு : இளநீர் வழுக்கையின் அளவு இளநீருக்கு இளநீர் மாறுபடும். எனவே, கிடைக்கும் வழுக்கையை அளந்து பயன்படுத்துவது நல்லது.

இதையும் படிங்க : Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!

36
முதலில் இளநீர் வழுக்கையைத் தயார் செய்யுங்கள்!
Image Credit : Asianet News

முதலில் இளநீர் வழுக்கையைத் தயார் செய்யுங்கள்!

முதலில் இரண்டு இளநீர்களில் உள்ள வழுக்கையைத் தனியாக எடுத்துக்கொள்ளவும். அதில் இருக்கும் கடினமான ஓடுகள் அல்லது தேவையற்ற பகுதிகளை நீக்கிவிடவும். பின்னர் வழுக்கையைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதில் பாதி அளவு வழுக்கையை மிக்ஸியில் போட்டு, சிறிதளவு இளநீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள வழுக்கையைச் சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். இதனால் அல்வாவில் வழுக்கையின் மென்மையான சுவையுடன் சிறிய துண்டுகளையும் உணர முடியும்.

இதையும் படிங்க : 90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!

46
அல்வா கலவையைத் தயாரிப்பது எப்படி?
Image Credit : Asianet News

அல்வா கலவையைத் தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்துக்கொள்ளவும். அதில் சிறிது இளநீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைத்துக்கொள்ளவும். மீதமுள்ள இளநீரையும் சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும். சர்க்கரை கரைந்ததும் தயாரித்து வைத்துள்ள சோள மாவுக் கலவையை மெதுவாக ஊற்றவும். இந்தக் கட்டத்தில் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் கட்டிகள் உருவாகலாம். கலவை கெட்டியாகத் தொடங்கியதும் அரைத்த இளநீர் வழுக்கையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இதையும் படிங்க : Dindigul Thalappakatti : வெற்றிலை பாக்குக் கடையில் தொடங்கிய பயணம்! இன்று ₹1000 கோடி சாம்ராஜ்யம்!

56
அல்வா பதம் வர நெய் சேர்க்கும் முறை!
Image Credit : Asianet News

அல்வா பதம் வர நெய் சேர்க்கும் முறை!

இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து கலவையைத் தொடர்ந்து கிளறவும். கலவை கண்ணாடி போன்ற பளபளப்பான தோற்றத்தைப் பெறத் தொடங்கும். அப்போது நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் ஏலக்காய்த்தூள், ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். மீதமுள்ள நறுக்கிய இளநீர் வழுக்கையையும் சேர்த்து மெதுவாகக் கலக்கவும். கலவை பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் திரண்டு வரத் தொடங்கும்போது அல்வா பதத்தை அடைந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம். அதிக நேரம் அடுப்பில் வைத்தால் அல்வா மிகவும் இறுக்கமாக மாறிவிடலாம். எனவே, மென்மையான பதம் கிடைத்ததும் அடுப்பை அணைக்கவும்.

இதையும் படிங்க : Silk Saree : பட்டுப் புடவையின் ஜரிகையில் இருந்து எவ்வளவு தங்கம் கிடைக்கும்? கணக்கு இதோ!

66
சுவையான இளநீர் வழுக்கை அல்வா தயார்!
Image Credit : Asianet News

சுவையான இளநீர் வழுக்கை அல்வா தயார்!

ஒரு சிறிய கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியைப் பொன்னிறமாக வறுக்கவும். தயாரித்த அல்வாவில் இதைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் நெய் தடவிய தட்டில் அல்வாவைக் கொட்டி சமமாகப் பரப்பவும். சிறிது நேரம் ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறலாம். மென்மையான இளநீர் வழுக்கையின் சுவையும், நெய் மற்றும் ஏலக்காயின் மணமும் சேர்ந்து இந்த அல்வாவுக்கு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.

சமையல் குறிப்பு : அல்வா தயாரிக்கும்போது தொடர்ந்து கிளறுவது மிகவும் முக்கியம். சோள மாவைக் கரைக்கும்போது கட்டிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். மேலும், இளநீர் வழுக்கையின் அளவு மற்றும் நீர்ச்சத்தைப் பொறுத்து கலவையின் பதம் மாறலாம். எனவே, இறுதியில் தேவையான பதம் கிடைத்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இதையும் படிங்க : Kitchen Tips : புதுப் பாத்திரத்தில் ஸ்டிக்கரை நீக்கியும் பிசுபிசுப்பா இருக்கா? இந்த 5 எளிய வழிகளை முயற்சி பண்ணுங்க!

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
தேங்காய்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
crispy snacks for kids: மழைக்காலத்திற்கு ஏற்ற ஸ்நாக்ஸ்; குழந்தைகளுக்கு பிடித்த பீட்ரூட் சீஸ் பால்!
Recommended image2
Home remedy for COLD & COUGH: கிச்சனே ஒரு மருந்தகம் தான்... வெறும் 3 பொருட்களில் சளி, இருமலை விரட்டலாம்!
Recommended image3
Chettinad special spicy chicken: இந்த மழைக்கு ஏற்ற காரசாரமான சிக்கன் ரெசிபி; செட்டிநாடு ஸ்டைலில் ட்ரை பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Bread Idli : அரிசியும் வேண்டாம்.. உளுந்தும் வேண்டாம்! பிரெட்டில் இட்லி செய்வது எப்படி?
Recommended image2
Idiyappam Biryani : இடியாப்பத்தில் பிரியாணியா? வித்தியாசமான சுவையில் ஒரு சூப்பர் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved