MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Low oil Easy Breakfast: எண்ணெய் குறைவு..சுவை நிறைவு! காலை உணவுக்கு இந்த ஈஸி ரெசிபி ட்ரை பண்ணுங்க!

Low oil Easy Breakfast: எண்ணெய் குறைவு..சுவை நிறைவு! காலை உணவுக்கு இந்த ஈஸி ரெசிபி ட்ரை பண்ணுங்க!

Sabudana Rava Idli : வழக்கமான இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? வீட்டில் இருக்கும் சாபுதானா, ரவை மற்றும் தயிரை வைத்து வித்தியாசமான சுவையில் சாபுதானா–ரவை இட்லி செய்து பாருங்கள். காலை உணவாக மட்டுமின்றி மாலை நேர சிற்றுண்டியாகவும் இதை பரிமாறலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 09 2026, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காலை உணவுக்கு இந்த ஈஸி ரெசிபி ட்ரை பண்ணுங்க!
Image Credit : pinterest

காலை உணவுக்கு இந்த ஈஸி ரெசிபி ட்ரை பண்ணுங்க!

தினமும் காலை இட்லி, தோசை என ஒரே மாதிரியான உணவுகளை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால், வீட்டில் இருக்கும் சாபுதானா (ஜவ்வரிசி), ரவை மற்றும் தயிரை வைத்து இந்த சுவையான, மென்மையான சாபுதானா–ரவை இட்லியை செய்து பாருங்கள்.

எண்ணெயில் பொரிக்காமல் ஆவியில் வேகவைப்பதால், காலை உணவாக மட்டுமின்றி மாலை நேர சிற்றுண்டியாகவும் இதை பரிமாறலாம். வழக்கமான இட்லிக்கு பதிலாக இப்படி ஒரு புதுமையான டிபன் செய்து கொடுத்தால் வீட்டில் அனைவரும் ஹாப்பி ஆயிடுவாங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தேவையான பொருட்கள்
Image Credit : pinterest

தேவையான பொருட்கள்

  • சாபுதானா (ஜவ்வரிசி) – 1 கப்
  • ரவை – 1 கப்
  • புளித்த தயிர் – 1 கப்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • துருவிய தேங்காய் – 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • சீரகம் – 1/2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • இஞ்சி – சிறிதளவு
  • பச்சை மிளகாய் – 1–2
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • முந்திரி – விருப்பத்திற்கேற்ப
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு
  • நறுக்கிய சோம்பு கீரை வாசனைக்காக

Related Articles

Related image1
Food Safety : சமைத்த மீனை ஃப்ரிட்ஜில் எத்தனை நாள் வைத்துச் சாப்பிடலாம்?
Related image2
Frozen Food: ஃப்ரோஸன் மீன், சிக்கன் வாங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க!
35
சுவையான சாபுதானா–ரவை இட்லி செய்வது எப்படி?
Image Credit : pinterest

சுவையான சாபுதானா–ரவை இட்லி செய்வது எப்படி?

  1. முதலில் ஜவ்வரிசியை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4–5 மணி நேரம் ஊறவைக்கவும். நன்றாக ஊறியதும் அதிகப்படியான தண்ணீரை வடித்துவிடவும்.
  2. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு ரவையை மிதமான தீயில் லேசாக வறுக்கவும். நல்ல வாசனை வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். ரவையை லேசாக வறுப்பது இட்லிக்கு நல்ல சுவையையும் தன்மையையும் கொடுக்க உதவும்.
  3. அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் ஊறிய சாபுதானா மற்றும் ரவையை சேர்க்கவும். இதனுடன் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இவற்றை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
45
தாளிப்பு சேர்க்கவும்
Image Credit : pinterest

தாளிப்பு சேர்க்கவும்

ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். அவை பொரிந்ததும் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு கீரை மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும். பிறகு இந்த தாளிப்பை ஊறிய இட்லி மாவில் சேர்த்து, அதனுடன் 1 டேபிள்ப் ஸ்பூன் துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

55
சாபுதானா–ரவை இட்லி ரெடி
Image Credit : pinterest

சாபுதானா–ரவை இட்லி ரெடி

அடுத்தது இட்லி பாத்திரத்தில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, இட்லி தட்டுகளில் மாவை ஊற்றவும். தொடர்ந்து தட்டுகளை உள்ளே வைத்து 8–10 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். வெந்ததும் ஒரு ஸ்பூன் பயன்படுத்தி இட்லிகளை மெதுவாக எடுக்கவும்.

வெளிப்புறத்தில் மென்மையாகவும், உள்ளே ஜவ்வரிசி முத்துக்கள் லேசாகத் தெரியும் வகையிலும் இருக்கும் இந்த சாபுதானா–ரவை இட்லியை தேங்காய் சட்னி, கார சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறினால் சுவை அசத்தலாக இருக்கும். காலை உணவாக மட்டுமின்றி, மாலை நேரத்திலும் இந்த வித்தியாசமான இட்லியை செய்து அசத்தலாம். நீங்களும் டிரை பண்ணி பாருங்கள் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

About the Author

V
Vishnupriya
உணவு
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Coffee-Tea : காபி, டீ குடிச்சதும் சிலருக்கு ஏன் பாத்ரூம் வருது? இது ஆபத்தா? காரணம் இதுதான்!
Recommended image2
Hot Drinks: சுடச்சுட டீ, காபி குடிப்பவரா நீங்க‌? தொண்டையை பதம் பார்க்கும் ஆபத்து.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
Recommended image3
Anti-Aging Foods: 40 வயதிலும் 25 போல இளமையாக இருக்கலாம்!
Related Stories
Recommended image1
Food Safety : சமைத்த மீனை ஃப்ரிட்ஜில் எத்தனை நாள் வைத்துச் சாப்பிடலாம்?
Recommended image2
Frozen Food: ஃப்ரோஸன் மீன், சிக்கன் வாங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved