MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Frozen Food: ஃப்ரோஸன் மீன், சிக்கன் வாங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க!

Frozen Food: ஃப்ரோஸன் மீன், சிக்கன் வாங்குபவரா நீங்கள்? இந்த ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க!

Frozen Food: பதப்படுத்தப்பட்ட ஃப்ரோஸன் மீன், சிக்கனில் உள்ள டிரான்ஸ் ஃபேட், அதிக சோடியம், சர்க்கரை, பிரிசர்வேட்டிவ்களால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட கேடுகள் ஏற்படும். சரியான‌ பதப்படுத்தப்பட் உணவுகளை எப்படி வாங்குவது? என பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 09 2026, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
உணவு தர விதிகளை மீறும் ஹோட்டல்கள்
Image Credit : AI

உணவு தர விதிகளை மீறும் ஹோட்டல்கள்

இந்தியாவில் சில சிறிய ஹோட்டல்கள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை சில நேரங்களில் உணவு பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டு வருகின்றன. அழுகிய சிக்கன் டீப் ஃபிரீசரில் வைத்து விற்பது, பழைய மட்டனை புதிதாகக் காட்ட, ஆபத்தான ரசாயனங்கள் கலப்பது, சமையலறைக்கு அருகிலேயே சாக்கடை, டாய்லெட் தண்ணீரில் பாத்திரங்கள் கழுவுவது, மசாலாவில் செங்கல் தூள் கலப்படம் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த ஹோட்டல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஃப்ரோஸன் மீன், சிக்கன் வாங்குபவரா நீங்கள்?

ஹோட்டல்கள் மட்டுமின்றி சில பிரபலமான ஆன்லைன் இ-காமர்ஸ் நிறுவனங்களின் கிடங்குகளிலும். காலாவதியான ஃப்ரோஸன் மீன், சிக்கன், மோமோஸ் போன்றவற்றை புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம்மில் பலர் வீட்டு உணவுகளை விட ஹோட்டல்கள், ஆன்லைன் உணவுகளையே விரும்பும் நிலையில், கடைகளில் இருந்து ஃப்ரோஸன் மீன் அல்லது இறைச்சி வாங்கும்போது, விலை, பிராண்ட் அல்லது எக்ஸ்பயரி டேட் மட்டும் பார்த்தால் போதாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பாக்கெட்டின் பின்புறம் மறைந்திருக்கும் ஆபத்து
Image Credit : freepik

பாக்கெட்டின் பின்புறம் மறைந்திருக்கும் ஆபத்து

1. டிரான்ஸ் ஃபேட் முதல் எதிரி

பாக்கெட்டில் 'Trans Fat 0g' என்று எழுதியுள்ளதா? அப்படி இல்லை என்றாலோ அல்லது 'Hydrogenated Vegetable Oil / Partially Hydrogenated Oil' என்று எழுதியிருந்தாலோ அதை வாங்காதீர்கள். ஃப்ரோஸன் பரோட்டா, நக்கட்ஸ், ஃபிரைஸ் போன்றவற்றை மொறுமொறுப்பாக வைத்திருக்க டிரான்ஸ் ஃபேட் சேர்க்கப்படுகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 50% அதிகரிக்கிறது. ஒரு நாளைக்கு 1 கிராம் டிரான்ஸ் ஃபேட் கூட பாதுகாப்பானது அல்ல என்று WHO கூறுகிறது.

2. சோடியம் / உப்பு அமைதியான ஆள்கொல்லி

100 கிராம் மாரினேட் செய்யப்பட்ட சிக்கனில் 700-1000 mg சோடியம் உள்ளது. ஆனால், ஒரு நாளைக்கு 2300 mg-க்கு மேல் சோடியம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதிகப்படியான உப்பு, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். பேக்கெட்டில் Sodium 500mg/100g-க்கு மேல் இருந்தால், அதைத் தவிர்ப்பது நல்லது.

Related Articles

Related image1
Frozen Meat: நீண்ட நாட்கள் இறைச்சியை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி
Related image2
Chicken: சிக்கன் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..சாப்பிடும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
34
3. இறைச்சியிலும் சர்க்கரையா
Image Credit : pinterest

3. இறைச்சியிலும் சர்க்கரையா

பல நிறுவனங்கள் சுவையை அதிகரிக்க மாரினேஷனில் சர்க்கரை, டெக்ஸ்ட்ரோஸ், கார்ன் சிரப் போன்றவற்றைச் சேர்க்கின்றன. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இன்கிரிடியன்ட்ஸ் பட்டியலில் முதல் 3 இடங்களில் சர்க்கரை / டெக்ஸ்ட்ரோஸ் இருந்தால், அதை வாங்க வேண்டாம்.

4. பிரிசர்வேட்டிவ்ஸ், இன்கிரிடியன்ட்ஸ் பட்டியல்

சோடியம் நைட்ரைட் (E250), சோடியம் நைட்ரேட் (E251), MSG (E621) போன்றவை இறைச்சியை சிவப்பாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் காட்டப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட அல்லது மாரினேட் செய்யப்பட்ட ஃப்ரோஸன் இறைச்சியில் அதிக உப்பு, சர்க்கரை அல்லது பிரிசர்வேட்டிவ்ஸ் இருக்கலாம். 'No Added Preservative' மற்றும் 'Ingredients: Chicken / Fish 100%' என்று எழுதப்பட்டிருப்பதை வாங்குவது சிறந்தது.

5. சேமிப்பு வழிமுறைகள்

பாக்கெட்டில் -18°C or below' என்று எழுதப்பட்டிருக்கும். கடையின் ஃபிரீசர் -18°C-ல் இல்லை என்றாலோ அல்லது பேக்கெட்டின் உள்ளே ஐஸ் கட்டிகள் உறைந்திருந்தாலோ, 'கோல்டு செயின்' உடைந்திருக்கிறது என்று அர்த்தம். அந்த பேக்கெட்டை வாங்காதீர்கள். IQF என்று எழுதப்பட்ட மீன்-இறைச்சி வகைகள் சிறந்தவை.

44
அப்படியானால் எதை வாங்குவது?
Image Credit : ChatGPT

அப்படியானால் எதை வாங்குவது?

பச்சையான, மசாலா சேர்க்கப்படாத என்று மட்டும் எழுதப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள் மிகவும் பாதுகாப்பானவை. IQF என்று எழுதப்பட்ட மீன்-இறைச்சி வகைகள் நல்லது. ஏனெனில், இதில் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும், மேலும் கோல்டு செயின் சரியாகப் பராமரிக்கப்பட்டிருக்கும். பிராண்டட் நிறுவனத்தின் FSSAI உரிம எண், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி ஒரே பிரிண்ட்டில் உள்ளதா எனப் பாருங்கள். தனி ஸ்டிக்கரில் ஒட்டப்பட்டிருந்தால் அது சந்தேகத்திற்குரியது.

நிபுணர்களின் ஆலோசனை

ஃப்ரோஸன் மீன்-இறைச்சியை வாங்கிய 1 மாதத்திற்குள் சாப்பிட்டுவிடுங்கள். சமைப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு நார்மல் ஃபிரிட்ஜில் வைத்து டிஃப்ராஸ்ட் செய்யுங்கள், வெளியில் வைத்து செய்ய வேண்டாம். வாரத்திற்கு 2 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட ஃப்ரோஸன் இறைச்சியை சாப்பிட வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gardening Tips: முட்டை வேகவைத்த தண்ணீரை இனிமேல் கொட்டாதீங்க... செடிகளுக்கு ஏன் நல்லது தெரியுமா?
Recommended image2
Parending Tips: குழந்தையின் கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? கத்தாமல், தண்டிக்காமல் சமாளிக்க 8 பெற்றோர் குறிப்புகள்
Recommended image3
Plastic Stool: பிளாஸ்டிக் ஸ்டூல் நடுவுல ஏன் ஓட்டை இருக்கு? இதுக்கு பின்னாடி இவ்வளவு பெரிய சயின்ஸா..?
Related Stories
Recommended image1
Frozen Meat: நீண்ட நாட்கள் இறைச்சியை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி
Recommended image2
Chicken: சிக்கன் பிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..சாப்பிடும்போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved