Frozen Meat: நீண்ட நாட்கள் இறைச்சியை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை செய்தி
Frozen Meat Side Effects: நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Kitchen TIPS
நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் இறைச்சியில் பாக்டீரியா உருவாகிவிடும். அதை சாப்பிடுவதன் மூலம் இரைப்பை நோய் உங்களை தாக்கலாம். மேலும், அவை ரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம் உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.
Kitchen TIPS
எனவே, ஃபிரிட்ஜில் மிகக் குறைந்த மற்றும் குளிரான பகுதியில் இறைச்சியை வைக்கவும்.
மேலும் ஃபிரிட்ஜில் இருக்கும் மற்ற உணவுப் பொருட்களிலிருந்து இறைச்சியை விலகி வைக்க வேண்டும்.
சமைத்த இறைச்சி மற்றும் சமைக்காத இறைச்சி இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.
இல்லையென்றால், இறைச்சியில் இருக்கும் பாக்டீரியா தொற்று நரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்னைகளை உண்டாக்குகிறது.
ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து சமைத்த பிறகு, அதை அடுத்த 24 மணி நேரத்திற்குள் அதை சாப்பிட்டு விட வேண்டும்.
இறைச்சியை நீண்ட நாட்கள் குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பதால், அதை சாப்பிட்ட பிறகு உணவு விஷமாக மாறக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது.
இறைச்சியை ஒருபோதும் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. அப்படி வைப்பதால், அதன் சுவை மற்றும் புரத சத்துக்கள் குறையும்.
Kitchen TIPS
பொதுவாக, சிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை உண்டாகும். சிலருக்கு சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாகும்
சிக்கனை் மட்டுமல்ல ஃபிரக்கோலி, மீன் போன்ற பல உணவுப் பொருள்களை நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாகக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.