வாயில் வச்சதுமே கரையும் மதுரை ஸ்டைல் பட்டர் பன்
மதுரை என்றாலே அசைவ சாப்பாடு வகைகளை தான் பிரபலமாக சொல்வார்கள். ஆனால் இங்கு ஸ்நாக் வகைகளும் மிகவும் பிரபலமானதாகும். அப்படி ரோட்டோர கடை முதல் பேக்கரி வரை கிடைக்கும் பலருக்கும் ஃபேவரைட்டான ஸ்நாக் தான் பட்டர் பன். இதை மிக எளிமையாக வீ்டடிலேயே கூை செய்து சுவைக்கலாம்.

பட்டர் பன் :
மதுரையின் தனிச்சிறப்புகளில் ஒன்று வேற லெவல் சுவையான பல வகையான உணவுகள் தான் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். இட்லி, பரோட்டா, ஜிகர்தண்டா மாதிரி பெரிய பட்டியலிலேயே ஒரு சின்னதா ஆனா மனசுக்குள்ள ஒட்டிக்கிடக்கும் சுடச்சுட டீக்கடை ஸ்நாக் தான் பட்டர் பன் டோஸ்ட். பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், டீ கடை என பல இடங்களில் கிடைக்கும். அந்த வெண்ணெய் உருகும் வாசனையே அனைவரையும் இழுத்த விடும். இந்த அனுபவத்தையும், சுவையையும் வீட்டிலேயே கொண்டு வர முடியும். அதுவும் மிகவும் எளிமையாக.
தேவையான பொருட்கள் (2 பேருக்கு) :
மென்மையான பன் – 2 (நறுக்கியது அல்லது முழுவதுமாக)
வெண்ணெய் (நெய் அல்ல) – 3 டீஸ்பூன்
சர்க்கரை – 2 டீஸ்பூன் (அல்லது உங்கள் சுவைக்கு ஏற்ப)
பாலாடை / க்ரீம் / மில்க்மெய்டு – 1 டீஸ்பூன் (விருப்பமானது)
மிளகு தூள் – தேவைக்கு ஏற்ப (optional, ஸ்பைஸிக்கு)
செய்முறை :
- தோசை கல் அல்லது பான் வைத்து மிதமாக சூடாக்க வேண்டும். அதிகம் சூடாக்கக் கூடாது.
- வெண்ணெய் 1 டீஸ்பூன் ஊற்ற வேண்டும். வெண்ணெய் உருகியது அதன் மீது பன்னை வைக்க வேண்டும்.
- இரண்டு பக்கமும் சுட்டு, பொன்னிறம் வரும் வரை ரோஸ்ட் செய்ய வேண்டும். அதே சமயம் மென்மை போகாம பாத்துக் கொள்ள வேண்டும்.
- பன்னிற்கு மேல சர்க்கரை தூவ வேண்டும். வெண்ணெயில் கலந்து அதுவே கரையுற மாதிரி இருக்கும்.
- விருப்பமிருந்தால், பாலாடை அல்லது க்ரீம் தடவலாம். இது பன்னிற்கு ருசிக்குள்ளே ஒரு richness கொடுக்கும்.
- கடைசில் இன்னொரு டீஸ்பூன் வெண்ணெய் மேல் மசிய தடவி, வெண்மையா மெலியும் வாசனை வரும் வரை பரிமாறலாம்.
பட்டர் பனின் ஸ்பெஷல் :
- இது சிம்பிள் ஸ்நாக்காக இருக்கும். ஆனால் இது ரோட்டோர கடையின் சுவையும் கலந்து இருக்கும்.
- இது காலை டீக்கு மட்டும் இல்லாமல், மாலை நேரத்திலே நல்ல company ஆக இருக்கும்.
- மழைக்காலங்களில் சத்தான, நிறைவான ஸ்நாக்காக இருக்கும்.
- சில பகுதிகளில் பன்னை லோக சர்க்கரை பாகு ஊற்றி ஊற வைத்து, அதற்கு மேல் பட்டர் தடவி சாப்பிட்டாலும் கூடுதல் இனிப்பு சுவையுடன் இருக்கும்.
- இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதாக இருக்கும்.
மேலும் படிக்க: காசிமேடு ஸ்பெஷல் அட்லப்பம் தயாரிக்க இந்த டிப்ஸ் ரொம்ப முக்கியம்
ரோட்டோர கடை டிப்ஸ் :
- வெண்ணெய், நெய் இல்லை என்றால் நல்ல பன்னீரை பட்டருக்கு பதில் பயன்படுத்தலாம் தேவை.
- பன்கள் ரொம்ப பழையதாக இருந்தால் தண்ணீரில் நனைத்து பின் வறுக்கலாம். மென்மை வரும்.
- சில்லுனு ஒரு சக்கரைத் தூள், சின்ன இலை பாக்கு எலச்சி தூள் கூட சேர்த்தால், ரோட்டோர கடை சுவை கிடைக்கும்.
- டீ உடன் தொட்டு சாப்பிட்டால் ரோட்டோர கடையின் சுவையை அனுபவிக்க முடியும்.