Cream Biscuits : கிரீம் பிஸ்கட் சாப்பிடுகிறீர்களா? அப்படி கண்டிப்பாக இதை தெரிஞ்சுக்கோங்க..!!
கிரீம் பிஸ்கட் ஆரோக்கியத்திற்கு எந்தவிதமான கேடுகளை விளைவிக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
பலர் பிஸ்கட் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஏன் இது நமக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸெ என்று கூட சொல்லலாம். அந்தவகையில், க்ரீம் பிஸ்கட், சால்ட் பிஸ்கட், பேக்கரி பிஸ்கட், க்ரீம் கிராக்கர்ஸ் என பிஸ்கட்களில் பல வகை உண்டு. ஒவ்வொரு முறையும் பசி எடுக்கும் போது இந்த பிஸ்கட்கள் நம்மை இழுக்கும். ஒரு பாக்கெட் பிஸ்கட் மற்றும் ஒரு பாட்டில் தண்ணீர் பசியை சிறிது நேரத்தில் தீர்க்கும்.
பெரும்பாலான மக்கள் ஒரு நேரத்தில் 8-10 பிஸ்கட்களை ஒரு பாக்கெட்டில் சாப்பிடுகிறார்கள். ஆனால் இது நல்லதல்ல என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இப்படி உண்பதால் உடலுக்குப் பலவிதங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. மலச்சிக்கல், குறிப்பாக செரிமான பிரச்சனை ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கிரீம் பிஸ்கட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே ஒரே நேரத்தில் அதிக அளவில் க்ரீம் பிஸ்கட் சாப்பிட்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
இதையும் படிங்க: காவி நிறத்தில் பூணூலோடு 'பிராமின் குக்கீஸ்' பிஸ்கெட்டில் சாதியை தூக்கி பிடிக்கணுமா? கொதிக்கும் நெட்டிசன்கள்
எடை அதிகரிப்பு ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. அதனால் தான் பசி எடுக்கும் போது தவறுதலாக கூட கிரீம் பிஸ்கட் சாப்பிட வேண்டாம். இது இதயப் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. க்ரீம் பிஸ்கட்டின் இனிப்பு சுவை மிகவும் கவர்ச்சிகரமானது. இந்த பிஸ்கட்டில் உள்ள சாறுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வகை பிஸ்கட் வயிற்றை அடைந்தவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கிறது. அதுபோல் சர்க்கரை நோயாளிகள் கிரீம் பிஸ்கட் சாப்பிடக்கூடாது.
இதையும் படிங்க: டீ-யுடன் பிஸ்கட் சாப்பிடுகிறீர்களா? இந்த பிரச்சினைகள் வரும்..ஜாக்கிரதை..!!
கிரீம் பிஸ்கட்டில் இரண்டு பொருட்கள் உள்ளன, பியூட்டிலேட்டட் ஹைட்ராக்சியானிசோல் மற்றும் பியூட்டிலேட்டட் ஹைட்ராக்ஸிடோலுயீன். இவை இரண்டும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பிஸ்கட் மைதா மாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால் ஓட்ஸ் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட்டில் கிரீம் இல்லை. மைதாவுடன் தயாரிக்கப்படும் கிரீம் பிஸ்கட்டில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இவற்றை தினமும் உட்கொள்வதால் மலச்சிக்கலும் ஏற்படும்.