Asianet News TamilAsianet News Tamil

காவி நிறத்தில் பூணூலோடு 'பிராமின் குக்கீஸ்' பிஸ்கெட்டில் சாதியை தூக்கி பிடிக்கணுமா? கொதிக்கும் நெட்டிசன்கள்

Brahmin Cookies: பெங்களூருவில் நடந்த பிராமண விழாவுக்காக தயார் செய்யப்பட்ட காவி நிற 'பிராமின்ஸ் குக்கீஸ்' சாதியை தூக்கி பிடிப்பதாக விவாதம் தொடங்கியுள்ளது. 

freddies baking studio's Brahmin Cookies became viral
Author
First Published Feb 1, 2023, 10:25 AM IST

பெங்களூரு ஃப்ரெடி பேக்கிங் கம்பெனி, குழந்தைகள் விரும்பி உண்ணும் குக்கீஸ் எனும் பிஸ்கெட்டுகளை பிரத்யேகமாக தயாரிப்பதில் பெயரெடுத்த நிறுவனம். இந்த பேக்கரி, மேகா என்பவரின் குடும்பத்தில் நடந்த பூணூல் அணியும் விழாவுக்காக 'பிராமின்ஸ் குக்கீஸ்' என்ற பெயரில் பிரத்யேக பிஸ்கெட்டுகளை தயாரித்துள்ளன. இந்த பிஸ்கெட்டுகள் தான் தற்போது ட்விட்டரில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்தியாவில் சாதியம் எளிதில் கண்டறிய முடியாத விஷயங்களிலும் ஊடுருவி உள்ளது. இந்நிலையில் உண்ணும் உணவில் ஜாதியைக் கொண்டு வந்த பேக்கரிக்கு எதிராக தற்போது சமூக வலைதளங்களில் வசைகள் சூடுபிடித்துள்ளன.

அந்த பிஸ்கெட்டுகளில் மொட்டையடிக்கப்பட்ட தலை, பூணூல் உள்ளிட்ட பிராமண அடையாளங்களுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இது தனி நபர் கொடுத்த ஆர்டரின் பெயரில் செய்யப்பட்டதாக பேக்கரி தெரிவிக்கிறது. இப்படி காரணங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாலும் சாதிய படிநிலையை நிலைநிறுத்தி, சாதிவெறிக்கு பங்களிக்கும் விஷயங்களை இயல்பாக்குவதாகத் தான் இந்த செயல் இருக்கிறது என ட்விட்டரில் கருத்துகள் பதிவிடப்படுகின்றன. 

ஃப்ரெடி பேக்கிங் கம்பெனி, இந்தப் பிஸ்கெட்டுகளின் புகைப்படத்தை வெளியிடும்போது, "ஒருவருடைய பாரம்பரியங்களை குக்கீயாக மாற்றுவது என்பது அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகும். இணையவாசிகள் தங்களின் வினோதமான குக்கீ திட்டங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்"என கேட்டு கொண்டது. ஆனால் இணையவாசிகள் இந்த விவகாரத்தை வேறுதளத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். 

 

சாதி அமைப்பை வெட்கமின்றி பாதுகாக்கும் நோக்கில் ஆதிக்க சாதியினர் புதுமையான வழிகளைக் கண்டுபிடித்துள்ளனர் என 'பிராமின்ஸ் குக்கீகளுக்கு' எதிராக ட்விட்டரில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த குக்கீயில் இருக்கும் உருவம் தெனாலிராமன் போல் இருப்பதாகவும் சிலர் கிண்டல் செய்துவருகின்றனர். இந்த சர்ச்சைகளுக்கு பிறகு அந்த குக்கீகளின் புகைப்படங்களை பதிவிட்ட நிறுவனம் நீக்கிவிட்டதாக தெரிகிறது. 

இதையும் படிங்க:இட்லி மாவு ஒரு வாரம் ஆனாலும் புளிக்காமல் அப்படியே இருக்கணுமா? வெற்றிலையின் மாயாஜாலத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios