- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- இனி ஷாம்பு வேண்டாம்...வீட்டில் இருக்கும் இந்த 5 பொருள் போதும்...ஆரோக்கியமான கூந்தலுக்கு
இனி ஷாம்பு வேண்டாம்...வீட்டில் இருக்கும் இந்த 5 பொருள் போதும்...ஆரோக்கியமான கூந்தலுக்கு
தலை முடியை சுத்தம் செய்வதற்கு ஷாம்பு தான் ஈஸியான வழி என அனைவரும் அதை தோடுகிறோம். ஆனால் அதில் உள்ள கெமிக்கல்களால் தோல், தலைமுடி பிரச்சனைகள் வருகின்றன. நம்முடைய வீட்டில் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான முடியைப் பெறலாம்.

ஷாம்பு பயன்பாடு :
சாதாரண ஷாம்புகளில் (Shampoo)உள்ள கெமிக்கல்கள் முடியை டேமேஜ் ஆக்கும். எனவே, சமையலறைப் பொருட்களை வைத்து முடியை சுத்தம் செய்வது நல்லது. முடிக்கு ஷாம்பு இல்லாமல் சுத்தம் செய்யக்கூடிய ஐந்து சமையலறைப் பொருட்கள் வாங்க தெரிந்து கொள்ளலாம். இந்த பொருட்களை பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்து வந்தாலே மின்னும், அடர்ந்தியான, ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். இவைகள் முடியை சுத்தமாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க உதவும்.
கடலை மாவு:
கடலை மாவு ஷாம்புவுக்கு சிறந்த மாற்றாக இருக்கும். இது முடியை நன்றாக சுத்தம் செய்யும். கடலை மாவை தண்ணீரில் கலந்து, தலை மற்றும் முடியில் தடவவும். 30 நிமிடம் கழித்து கழுவவும். இது அழுக்கு மற்றும் எண்ணெயை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.
தேங்காய் பால்:
தேங்காய் எண்ணெய் முடிக்கு நல்லது. அதேபோல் தேங்காய் பாலும் நல்லது. தேங்காய் மற்றும் தண்ணீரை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அதை வடிகட்டி தேங்காய் பால் எடுக்கவும். இது முடியை ஈரப்பதமாக்கி, வலுவாக்கும். தேங்காய் பாலை தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யலாம்.
கற்றாழை:
கற்றாழை சருமத்திற்கும், முடிக்கும் நல்லது. கற்றாழை ஜெல்லை தலை மற்றும் முடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். கற்றாழை முடியை ஈரப்பதமாக்கி, பொடுகை நீக்கும். சிறந்த பலன் பெற வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும்.
தயிர்:
சுத்தமான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான முடிக்கு தயிர் பயன்படுத்தவும். தயிரை தலை மற்றும் முடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். தயிர் முடியை ஈரப்பதமாக்கி, அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தயிர் பயன்படுத்துவது நல்லது.
நெல்லிக்காய் பொடி:
நெல்லிக்காய் பொடி ஷாம்புவுக்கு மாற்றாக சிறந்தது. இது முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தும். முடி உதிர்வை தடுக்கும். இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி நெல்லிக்காய் பொடியை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து, தலை மற்றும் முடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து கழுவவும். இது அழுக்கை நீக்கி, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.