- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Curd : ஒரு டீஸ்பூன் தயிர்!! முகம் முடிக்கு இப்படி யூஸ் பண்ணா... எதிர்பார்க்காத ரிசல்ட் கிடைக்கும்
Curd : ஒரு டீஸ்பூன் தயிர்!! முகம் முடிக்கு இப்படி யூஸ் பண்ணா... எதிர்பார்க்காத ரிசல்ட் கிடைக்கும்
Curd on Face and Hair : முகம் மற்றும் கூந்தல் பிரச்சினைக்கு தயிரை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Curd on Face and Hair
தயிர் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, முகம் மற்றும் கூந்தல் பிரச்சினைக்கும் பயன்படுத்தலாம். ஏனெனில் தயிரில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன அவை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இப்போது இந்த பதிவில் தயிரை கூந்தல் மற்றும் முகத்திற்கு எப்படி பயன்படுத்த வேண்டும். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்துகொள்ளலாம்.
முகத்திற்கு தயிரை எப்படி பயன்படுத்தணும்?
ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தயிரில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்கு கலந்து அதை உங்களது முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தயிர் ஸ்க்ரப் :
இந்த ஸ்க்ரப் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது. இந்த ஸ்க்ரப் தயாரிக்க தயிரில் அரிசி மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சருமத்திற்கு தயிரின் நன்மைகள் :
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் தினமும் முகத்திற்கு தயிரை பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல் முகப்பிரச்சனை உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
தலைமுடிக்கு தயிர் எப்படி பயன்படுத்த வேண்டும்?
தலைக்கு குளிக்கும்போது ஷாம்பு போடுவதற்கு முன் தயிர் தடவ வேண்டும். இதனால் கூந்தலுக்கு புரதம் கிடைக்கும். குறிப்பாக வறண்ட முடி உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது. தயிர் தலைமுடியை மென்மையாக மாற்ற உதவுகிறது.
தலைமுடிக்கு தயிர் பயன்படுத்துவதன் நன்மைகள் :
தலைமுடிக்கு விலை உயர்ந்த ஷாம்புக்களை பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரை பயன்படுத்துவது நல்லது இது தலைமுடியை மென்மையாக மாற்றும், உச்சந்தலையை சுத்தமாக வைக்க உதவும்.