- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Curd Face Pack : கண்ட க்ரீம் எதுக்கு? வெறும் தயிர்ல ஒரே நாளில் முகம் பளிச்சுன்னு மாற டிப்ஸ்!
Curd Face Pack : கண்ட க்ரீம் எதுக்கு? வெறும் தயிர்ல ஒரே நாளில் முகம் பளிச்சுன்னு மாற டிப்ஸ்!
ஒரே நாளில் முகத்தை பளிச்சுனு மாற்ற தயிரை பயன்படுத்தி போடப்படும் சில ஃபேஸ் மாஸ்க் பற்றி இங்கு பார்க்கலாம்.

Curd Face Pack
முகத்தின் அழகை மேம்படுத்த கண்ட கண்ட க்ரீன்களை போடுவதற்கு பதிலாக நம் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து முகத்தின் அழகாய் பராமரிக்கலாம் தெரியுமா? அந்த அற்புத பொருள் தான் தயிர். ஆமாங்க சரும பராமரிப்பில் தயிர் மேஜிக் போல செயல்படும் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த பதிவில் சருமத்திற்கு தயிர் நன்மைகள் மற்றும் ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சருமத்திற்கு தயிர் நன்மைகள்
தயிர் சமையல் மற்றும் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் அருமருந்தாக செயல்படும். இதில் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளதால் அது சருமத்திற்கு ஆழமாக ஈரப்பதத்தை வழங்கி, மிருதுவாக வைக்க உதவுகிறது. இதனால் சருமம் இயற்கையாகவே பளபளப்பாக, பிரகாசமாக இருக்கும். ஆய்வுகள் கூட, சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.
தயிர் மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்
துருவிய வெள்ளரிக்காயில் தயிர் சேர்த்து அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு குளிர்ச்சி மற்றும் புத்துணர்வை வழங்கும்.
தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
ஒரு ஸ்பூன் தயிருடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தின் நிறம் மேம்படும், கறைகள் அனைத்தும் முற்றிலும் நீங்கிவிடும்.
தயிர் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்
முகப்பரு உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் பெஸ்ட் சாய்ஸ். இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிக்க ஒரு ஸ்பூன் தயிருடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதை முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தேனில் இருக்கும் ஆன்டிபாகரியல் பண்புகள் பருக்களை குறைக்கவும், தடுக்கவும் உதவும்.
தயிர் மற்றும் பப்பாளி ஃபேஸ் மாஸ்க்
நன்கு பழுத்த பப்பாளியை மசித்து அதனுடன் தயிர் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, பின் நன்கு காய்ந்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் பப்பாளியில் இருக்கும் என்சைமன்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி சருமத்தை மிருதுவாக மாற்ற உதவும்.
குறிப்பு
- இந்த ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த மறக்காதீர்கள்.
- தயிருடன் ஒருபோதும் எலுமிச்சத்தை சேர்க்க வேண்டாம். அது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.
- தயிருடன் கலந்த மாவு சேர்ப்பது நல்லது என்றாலும் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது நல்லதல்ல. இது சருமத்தை மேலும் வறட்சியைக்கிவிடும்.