- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Curd Face Pack : தயிரில் இப்படி பேஸ் பேக் போடுங்க.. அழுக்கு, கருமை நீங்கி முகம் ஜொலிக்கும்
Curd Face Pack : தயிரில் இப்படி பேஸ் பேக் போடுங்க.. அழுக்கு, கருமை நீங்கி முகம் ஜொலிக்கும்
ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் முகம் ஜொலிக்க தயிருடன் சில பொருட்களை கலந்து இரவு தூங்கும் முன் போடுங்கள். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Curd for Glowing Skin
முகம் எப்போதுமே ஜொலி ஜொலிப்பாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது. அதுவும் குறிப்பாக பெண்கள் தங்களது முகம் எப்போதுமே ஜொலிப்புடன் இருப்பதை விரும்புவார்கள். இதற்காக அவர்கள் கடைகளில் விற்பனையாகும் விலையுயர்ந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் எந்தவித செலவுமின்றி முகத்தை ஜொலிக்க வைக்கலாம் தெரியுமா? அதற்கு வீட்டில் இருக்கும் ஒரு பொருள் ஒன்று போதும். அதுதான் தயிர்.
பொதுவாகவே நம் எல்லோருடைய வீட்டிலும் தயிர் கண்டிப்பாக இருக்கும். தயிருடன் சில பொருட்களை கலந்து தினமும் இரவு தூங்கும் முன் ஃபேஸ் பேக் போட்டால் முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும். அவை என்னென்ன? அவற்றை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் :
உங்களது முகத்தின் நிறம் மாறி இருந்தாலோ அல்லது சொறி பிரச்சனை இருந்தாலும் தயிருடன் ரோஸ் வாட்டர் கலந்து ஃபேஸ் பேக்காக போடுங்கள். விரைவில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். இதற்கு ஒரு ஸ்பூன் தயிருடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும்.
தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் :
வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்தை சுத்தம் செய்ய தயிர் மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் போடுங்கள். இதற்கு மூன்று ஸ்பூன் தயிரில் அரை ஸ்பூன் மஞ்சள் கலந்து போடவும். இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை எப்போதுமே பல பலப்பாக வைத்திருக்கும். வாரத்திற்கு 2-3 முறை மட்டும் இதை போட்டால் போதும்.
தயிர் மற்றும் தேன் ஃபேஸ் பேக்:
2 ஸ்பூன் தயிரில், 1 ஸ்பூன் தேன் கலந்து ஃபேஸ் பேக்காக போடுங்கள். சுமார் 20 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும் இந்த ஃபேஸ் பேக் முகத்தை பளபளப்பாக்கும்.
தயிர் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்:
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்களது சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த ஃபேஸ் பேக் மிகவும் நன்மை பயக்கும்.
தயிர் மற்றும் தக்காளி ஃபேஸ் பேக் :
இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க தயிர் மற்றும் தக்காளி விழுதை சம அளவு எடுத்துக் கொண்டு அதை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு லேசாக மசாஜ் செய்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை பொலிவாக்கும்.
தயிர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் :
சிறிதளவு தயிருடன் கொஞ்சமாக கடலை மாவு கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவு வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தை பளபளபாக்கும்.
தயிர் மசாஜ்
மூன்று ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளுங்கள் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகம் எப்போதுமே பளபளப்பாக இருக்கும்.
முகத்திற்கு தயிர் நன்மைகள் :
- இறந்த சரும செல்களை நீக்க உதவும்.
- சருமத்தின் நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தி, சருமத்தின் பொலிவை ஊக்குவிக்கும்.
- சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
- சருமத்தில் இருக்கும் கறுப்பு புள்ளிகளை குறைக்கவும், சருமத்தை இறுக்கமாகவும் உதவும்.