Leftover Curd : பழைய தயிரை இப்படி யூஸ் பண்ணுங்க முகம் ஜொலி ஜொலிக்கும்!!
பழைய தயிரை தூர போடாமல் அதை புத்திசாலித்தனமாக பல வழிகளில் பயன்படுத்தலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பழைய தயிரை பயன்படுத்தும் வழிகள்
தயிர் ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக இருக்கும் ஒரு உணவு பொருள். பெரும்பாலான உணவுகளில் தயிர் ஒரு முக்கிய அங்கமாக வகிக்கிறது. உலகம் முழுவதும் பல சமையலில் இது பரவலாக பயன்படுத்தப்படுகின்றது. நம் இந்திய வீடுகளில் மதிய உணவிற்கு பிறகு கடைசியில் தயிருடன் முடித்தால்தான் பலரும் திருப்தியாக உணர்வார்கள். இந்நிலையில், சில சமயங்களில் ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்த தயிரை பயன்படுத்த மறந்துவிடுகிறோம். இதனால் அந்த தயிர் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாமல் இருப்பதால் அதை துரப்போடுகிறோம். ஆனால் பழைய தயிரை தூரப்பபோடுவதற்கு பதிலாக புத்திசாலித்தனமாக பல வழிகளில் பயன்படுத்தலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
எக்ஸ்ஃபோலியேட் :
பழைய தயிருடன் சிறிதளவு சர்க்கரை, தேன் மற்றும் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் போட வேண்டும். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் போல செயல்படும். காரணம் தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்றும். சர்க்கரை மற்றும் ஓட்ஸ் சிறந்த எக்ஸ்ஃபோலியேட் செய்ய உதவும். முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கிய பிறகு முகம் பளபளக்கும். இந்த பேஸ்டை உங்களுக்கு முகத்தில் தடவி பிறகு வட்ட வடிவில் மசாஜ் செய்ய மறக்காதீர்கள்.
புதிய தயிர் தயாரிக்கலாம்!
மீதமான அல்லது பழைய தயிரை கொண்டு புதிய தயிர் தயாரிக்க பயன்படுத்தலாம். இதற்கு பாலுடன் மீண்ட தயிரை கலக்கும் போது புதிய தயிர் உருவாகும்.
ஹேர் மாஸ்க் போடலாம்!
பழைய தயிரை குப்பையில் கொட்டுவதற்கு பதிலாக மிகவும் சிம்பிளான மற்றும் பயனுள்ள ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம். இந்த ஹேர் மஸ் தயாரிக்க தயிருடன் ஒரு மசித்த வாழைப்பழம், ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து அதை தலைமுடியில் தடவி சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு லேசான ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இந்த ஹேர் மாஸ் உங்களது கூந்தலில் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவும்.
முகப்பருவை குறைக்கும் :
பழைய தயிரில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் இருக்கும் முகப்பருவை போக்க உதவுகிறது. இதற்கு பழைய தயிரில் மஞ்சள் அல்லது வேப்பம்பூ பொடியை கலந்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகம் தெளிவாக மாறும்.
பாதத்திற்கு நல்லது!
உங்களது பாதம் வறண்டு போயிருந்தால் அதை மென்மையாக்க மீதமுள்ள தயிரை பயன்படுத்தலாம். இதற்கு சூடான நீரில் சிறிதளவு தயிரை சேர்த்து உங்களது கால்களை அதில் சுமார் 20 நிமிடங்கள் அப்படி ஊற வைக்க வேண்டும். தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் பாதத்தில் இருக்கும் இறந்த சருமத்தை நீக்க உதவுகிறது. அதே சமயம் பாதத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைக்க உதவும்.
வெயிலிலிருந்து பாதுகாக்கும்!
வெயிலால் உங்களது சருமம் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்க தயிர் உதவும். தயிரில் இருக்கும் அலர்ஜி மற்றும் குளிர்ச்சி பண்புகள் சருமத்தின் வீக்கம், எரிச்சல், சிவத்தல் பிரச்சினையை குறைக்கிறது. இதற்கு நேரடியாக தயிரை சருமத்தில் தடவலாம்.