தயிரினை, சில உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்களை பரிந்துரைக்கின்றனர். அவை, என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தயிர் என்பது குளிர்ச்சியான பானமாகும். உடல் சூட்டை தனித்து நமக்கு ஆரோக்கியம் தருகிறது. நம்முடைய பாரம்பரிய கலாச்சார படி, தயிர் பெரும்பாலும் மதிய உணவு வேளையில் உண்பது வழக்கம். கால்சியம், வைட்டமின் B2 மற்றும் வைட்டமின் B12, பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், தயிரினை, சில உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்களை பரிந்துரைக்கின்றனர்.

ஏனெனில், சில உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிட்டால், செரிமானத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், சரும பிரச்சனைகளையும், உடல் உபாதைகளை உண்டாக்கும் என்கின்றனர்.

அப்படி எந்தெந்த உணவுகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

தயிர் மற்றும் மாம்பழம்:

தயிர் சாப்பிட்ட பின் மாம்பழத்தை சாப்பிடுவது அல்லது இரண்டு உணவுகளையும் சேர்த்து சாப்பிடுவது நம் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும். மேலும், இந்த கலவையானது சிலருக்கு திடீர் உணவு எதிர்வினைகள் அல்லது தோல் ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.

வெங்காயம்:

தயிர் குளிர்ச்சி தரக்கூடியது. வெங்காயம் சூட்டை கிளப்பக் கூடியது. இந்த இரண்டு எதிர் தன்மைக் கொண்ட உணவை ஒன்றாக இணைத்து சாப்பிடுவது உடல் உபாதைகளை உண்டாக்கும்.

பால் மற்றும் தயிர்:

பாலில் இருந்து தான் தயிர் உருவாகிறது. இருப்பினும் தயிரையும், பாலையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு பால் மற்றும் தயிரை இணைப்பது அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். பால் நொதித்தல் மூலம் தயிர் தயாரிக்கப்படுகிறது, ஏனெனில் புரதத்தின் இரு ஆதாரங்களும் கொழுப்புகளில் அதிகம் இருப்பதால், ஒரே நேரத்தில் இந்த இரு உணவுகளை சாப்பிட கூடாது.

மீன் மற்றும் தயிர்:

இரண்டிலும் அதிக புரதம் உள்ளது. ஒரே நேரத்தில் அதிக புரதச்சத்துக்களைக் கொண்ட இவ்விரண்டு உணவு பொருட்களையும் சாப்பிட கூடாது. நம் உடல் அதிகப்படியான புரதத்தை எடுத்துக் கொள்ளும் போது அஜீரண கோளாறு மற்றும் தோல் பிரச்சினைகள் உருவாகும். மீனை போல் முட்டையிலும் அதிக புரதம் உள்ளது. அதனால் முட்டையையும் தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

எண்ணெய் உணவு:

எண்ணெயுடன் வறுத்த உணவு , பொறித்த உணவு போன்றவற்றை தயிருடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. இது செரிமானத்தைக் குறைத்து உடல் உபாதைகளை உண்டாக்கும். மேலும் நம்மை இது சோம்பேறியாக உணர வைக்கும். 

உளுத்தம் பருப்பு மற்றும் தயிர்:

உளுத்தம் பருப்பை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால், அது செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும். இதன் விளைவாக அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படும்.

 தயிரின் நன்மைகள் அறிக:

தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் தோல் மற்றும் தலை முடி வளர்ச்சிக்கு நல்லது. தசைகள் இறுக்கமாகவும் தயிர் உதவும்.

தயிரை நேரடியாக தலையில் அப்ளை செய்தாலே பொடுகு, தொற்று, தலை வறட்சி போன்ற பிரச்னைகளை சரிசெய்யலாம்.

அதுமட்டுமின்றி, தயிர் மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால் மன அழுத்தம், எதிர்மறை சிந்தனைகள் வராதாம்.

எனவே, மேற்கூறிய காமினேஷனை தவிர்த்து, தயிரை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கலாம்.