- Home
- Lifestyle
- Curd Side effects: இரவில் தயிர் சாப்பிட்டால் என்ன பிரச்சனை..? ஆயுர்வேத நிபுணர்கள் சொல்வது என்ன..?
Curd Side effects: இரவில் தயிர் சாப்பிட்டால் என்ன பிரச்சனை..? ஆயுர்வேத நிபுணர்கள் சொல்வது என்ன..?
Curd Side effects: இரவு நேரங்களில் தயிரை சாப்பிடுவது..? ஆரோக்கியத்திற்கு ஏன்.? நல்லதல்ல என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

Curd Side effects:
தயிர் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:
தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தயிரில் இயற்கையான முறையில் ப்ரோபயோடிக்ஸ் என்னும் அமிலம் உள்ளது. இது மன அழுத்தம், சோர்வை உண்டாக்கும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் சுரத்தலை கட்டுப்படுத்துவதால் குடலுக்கு நன்மை தருகிறது.
தயிர் என்பது குளிர்ச்சியான பானமாகும். உடல் சூட்டை தனித்து நமக்கு ஆரோக்கியம் தருகிறது. ஆனால், இரவு நேரங்களில் தயிர் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல, என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
Curd Side effects:
தயிரில் இவ்வளவு நன்மைகள் இருந்தும், இரவு நேரத்தில் தயிர் சாப்பிடும் போது அது உடலுக்கு பாதகமாக மாறுகிறது. ஆம், இரவு நேரத்தில் தயிர் சாப்பிடக்கூடாது என்று ஆயுர்வேதம் பரிந்துரைப்பதற்கான முக்கிய காரணம் தெரிந்து கொள்வோம்.
Curd Side effects:
என்ன காரணம்..?
செரிமான கோளாறு அல்லது பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்கள் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில், தயிர் என்பது விரைவாக ஜீரணம் ஆகாத ஒரு பொருள். பொதுவாகவே மனிதர்களுக்கு இரவு நேரங்களில் ஜீரணசக்தி குறைவாகத்தான் இருக்கும். எனவே, எப்படிப்பட்ட உடல் சூழ்நிலை உள்ளவர்களும் இரவு நேரங்களில் கட்டாயம் தயிர் சாப்பிடக்கூடாது. இது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
Curd Side effects:
கட்டாயம் யாரெல்லாம் தயிர் சாப்பிட கூடாது..?
இந்த தயிரை நாம் காலை வேளையில் அருந்தலாம், மதியம் வேளையிலும் தயிர் அருந்தலாம். கட்டாயம் இரவு அருந்தக்கூடாது. குறிப்பாக, செரிமான கோளாறு அல்லது பலவீனமான செரிமான அமைப்பு கொண்டவர்கள் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்கள் இரவு நேரத்தில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுனமின்று, அதிக குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள் தயிர். சளி இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் இரவு நேரங்களில் இதை தவிர்ப்பது நல்லது.மேலும், ஆஸ்துமா இருப்பவர்களும், இரவு நேரத்தில் தயிர் சாப்பிடவே கூடாது.