- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Glowing Skin : ஒரு ரூபாய் செலவில் முகம் பளபளக்க பானங்கள்!! தங்கம் போல ஜொலிக்கும் சருமம்
Glowing Skin : ஒரு ரூபாய் செலவில் முகம் பளபளக்க பானங்கள்!! தங்கம் போல ஜொலிக்கும் சருமம்
சருமத்தை இயற்கையாகவே பொலிவாக வைத்திருக்க உதவும் சில பானங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Natural Juices for Glowing Skin
பொதுவாக எல்லா பெண்களுமே தங்களது முகாம் எப்போதுமே பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பலவிதமான டிப்ஸ்களை முயற்சித்துப் பார்ப்பார்கள். ஆனால் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே முகத்தில் பொலிவு இயற்கையாக பெருகும் என்று சொல்வது நீங்கள் கேள்விப்பட்டீர்கள். இத்தகைய சூழ்நிலையில் உங்களது முகமற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சில பல சாறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றை தினமும் குடித்துக் கொண்டு வந்தால் சருமத்தில் நல்ல மாற்றங்களை நீங்கள் காண்பீர்கள். இந்த பதிவில் முகத்தை இயற்கையாகவே பளபளப்பாக மாற்ற உதவும் சில பானங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
எலுமிச்சை சாறு
உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி நிறைந்த பழங்களில் முதன்மையான பட்டியலில் இருப்பது எலுமிச்சை தான் எலுமிச்சை சாறு. எலுமிச்சை சாறு உடல் உஷ்ணத்தை தனித்து உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். மேலும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை குறைத்து சருமத்தை பொலிவாக வைத்திருக்க இது உதவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இந்த பானம் பெஸ்ட் சாயிஸ். இதை தொடர்ந்து குடித்து வந்தால் சருமம் ஈரப்பதமாக இருக்கும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், கருவளையம் போன்ற பிரச்சனைகள் வரவே வராது.
ஆப்பிள் ஜூஸ்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். நார்ச்சத்து நிறைந்த ஆப்பிள் ஜூஸை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வரவே வராது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு தான் முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். எனவே நீங்கள் தினமும் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதன் மூலம் முகப்பரு பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம். மேலும் ஆப்பிளில் மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வறண்ட சருமத்தை மென்மையாக்கும் மற்றும் சுருக்கத்தை நீக்கும்.
கேரட் ஜூஸ்
வைட்டமின் ஏ நிறைந்த கேரட் சாறு சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்க உதவுகிறது. தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். மேலும் சருமத்தை பளபளக்க செய்யும். கேரட் ஜூஸ் போல பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். இதுவும் சருமத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை அளித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மாதுளை ஜூஸ்
மாதுளை ஜூஸ் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும். தினமும் ஒரு கிளாஸ் மாதிரி ஜூஸ் குடித்து வந்தால் உடல் சுத்தமாகி மேம்படும். இதனால் சருமம் பளிச்சென்று மாறும். எனவே நீங்கள் இயற்கையாகவே சருமத்தை பொலிவாக்க விரும்பினால் தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடியுங்கள்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் சாறு சரும வறட்சியை போக்க உதவுகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும் பண்புகள் இதில் உள்ளன. கோடைகாலத்தில் ஏற்படும் அதிகப்படியான சரும வளர்ச்சியை தடுக்க தினமும் ஒரு கிளாஸ் வெள்ளரிக்காய் சாறு குடித்து வந்தால் சருமம் நீரேற்றமாக இருக்கும். உடல் உஷ்ணம் தணியும். அதுமட்டுமல்லாமல் கூந்தலும் வளர்ச்சியடையும்.
தக்காளி ஜூஸ்
அழகு குறிப்பில் தக்காளியும் அதிகமாக நாம் பயன்படுத்துகிறோம். தக்காளியில் இருக்கும் லைகோபீன் என்னும் பண்புகள் சருமத்தை இளமையாக வைக்க உதவும். மேலும் தக்காளியில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்கள் முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். உணர்திறன் சருமம், வறண்ட சருமம், எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு தக்காளி பானம் ரொம்பவே நல்லது. எனவே தினமும் ஒரு கிளாஸ் தக்காளி ஜூஸ் குடித்து வந்தால் சருமம் நன்றாக இருக்கும். நீங்களும் சோர்வாக இல்லாமல் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
மேலே சொன்ன பானங்களில் ஏதேனும் ஒன்றை அல்லது ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பானம் என்று குடித்து வந்தால் இயற்கையான அழகைப் பெறலாம்.