- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Youthful Skin Habits : 40 வயசுக்கு மேல கண்டிப்பா 'இத' பண்ணுங்க.. அப்பதான் வயசே ஆகாது!
Youthful Skin Habits : 40 வயசுக்கு மேல கண்டிப்பா 'இத' பண்ணுங்க.. அப்பதான் வயசே ஆகாது!
வயசானாலும் இளமையாக தெரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை தினமும் செய்யுங்கள். அவை என்னவென்று என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Youthful Skin Habits
பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க இளமையாக இருக்க வேண்டும் என்று நம் அனைவரும் விரும்புவோம். அதிலும் குறிப்பாக வயதான பிறக்கும் சருமம் இளமையாக இருந்தால் யாருக்கு தான் பிடிக்காது? எனவே, வயது ஆக ஆக சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் உங்களது உண்மையான வயதை விட 10 வயது கூடுதலாக பார்ப்பதற்கு இருப்பீர்கள். இத்தகைய சூழ்நிலையில், வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தால் உங்களது வயதை விட 10 வயது கம்மியாக தெரிவீர்கள் தெரியுமா? இதற்கு இந்த பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை தினமும் செய்து வந்தால் மட்டும் போதும். இளமையாக தெரிவீர்கள். அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.
1. தண்ணீர்
சருமம் வறட்சியாகாமல் இருக்க தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். இதனால் சருமம் பொலிவாக இருக்கும் மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் வராது. சருமத்தை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
2. தூக்கம்
சருமம் ஆரோக்கியமாக இருக்க சரியான தூக்கம் மிகவும் அவசியம். இதற்கு தினமும் 7 முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். ஏனெனில் நான் தூங்கும் போது சருமம் தன்னை தானே சரி செய்து கொள்ளும். நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் சருமத்தில் பாதிப்பு ஏற்படும்.
3. ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவுகள்
உங்களது உணவில் அதிகமாக ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் சருமம் எப்போதுமே இளமையாக இருக்கும். கீரைகள், காய்கறிகள், பழங்கள், பெர்ரிவகைகள், நட்ஸ்கள் போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.
4. சரும சுத்தம்
முகத்தில் மாசு, அழுக்கு, தூசி, அதிகப்படியான எண்ணெய் போன்றவை தேங்கி இருக்கும். எனவே அவ்வப்போது முகத்தை நீரில் கழுவவும். இல்லையெனில் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படும். மேலும் சருமம் தெளிவாக இல்லை என்றாலும் சுருக்கங்கள் ஏற்படும். குறிப்பாக தூங்கும் முன் கண்டிப்பாக முகத்தை சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
5. சன்ஸ்கிரீன்
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் உதவுகிறது. மேலும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் வருவதையும் தடுக்க இது உதவுகிறது. எனவே நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக சன்ஸ்கிரீன் போடுங்கள். அதுபோல சருமத்திற்கு மாய்ஸ்சரைசரும் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
6. உடற்பயிற்சி
நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமமும் சுருக்கமின்றி இருக்கும். பார்ப்பதற்கும் இளமையாக தெரிவீர்கள். இதற்கு வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்றவற்றை செய்யலாம். இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
7. ஃபேஷியல் மசாஜ்
பேஷியல் மசாஜ் செய்தால் சருமம் தொய்வடையாமல் இருக்கும். மேலும் கொலாஜன் உற்பத்தியும் தூண்டும். கலா ஜான் உற்பத்தி அதிகரித்தால் சருமம் தொய்வடையாமல் இளமையாக வைக்க உதவும்.
8. மன அமைதி
மன அழுத்தம் இல்லாமல் மனதை எப்போதுமே அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மன அமைதியுடன் ரிலாக்ஸ் ஆன முகத்துடன் இருந்தால் இளமையாக தோன்றுவீர்கள்.