MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • DJD : டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனல்! நடனத்தால் நடுவர்களை மெர்சலாக்கி லட்சக்கணக்கில் பரிசுகளை வென்றது யார் தெரியுமா?

DJD : டான்ஸ் ஜோடி டான்ஸ் பைனல்! நடனத்தால் நடுவர்களை மெர்சலாக்கி லட்சக்கணக்கில் பரிசுகளை வென்றது யார் தெரியுமா?

ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் என்கிற நடன நிகழ்ச்சியின் பைனலில் வெற்றிபெற்றவர்கள் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Apr 15 2024, 02:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dance jodi dance Final

Dance jodi dance Final

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா மற்றும் சினேகா ஆகியோர் கலந்து கொண்டனர். 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பாப்புலராகி கலக்கி வந்தது. 

24

இந்த நிலையில் 5 ஜோடிகளுடன் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு தினமான நேற்று நடந்து முடிந்தது. ராகவா லாரன்ஸ் சிறப்பு விருந்தினராக வருகை தர ஸ்ரீதர் மாஸ்டர், சேகர் மாஸ்டர் ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்றனர். 5 போட்டியாளர்களும் பரபரப்பான நடனத்துடன் மேடையை அதிர வைத்து நடுவர்களை கவர்ந்தனர். இறுதியாக இந்த நிகழ்ச்சியின் டைட்டிலையும் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையையும் நவீன் - அக்‌ஷதா ஜோடி வென்றனர். 

இதையும் படியுங்கள்... Anjali Photos : சேலையில் ரெட் ஹாட் ஏஞ்சலாக மாறிய நடிகை அஞ்சலி... கட்டழகை காட்டி மயக்கும் கவர்ச்சி போட்டோஸ் இதோ

34

மேலும் இப்ராஹிம் - அக்ஷிதா ஜோடி முதல் ரன்னர் அப்பாக வந்து இரண்டாம் இடத்தை பிடிக்க, விவேக் - கௌரி ஜோடி இரண்டாவது ரன்னர் அப்பாக வந்து மூன்றாம் இடத்தை பிடித்தனர். டைட்டிலை வென்றதோடு ரூ.10 லட்சத்துக்கான பரிசையும் தட்டிச்சென்ற நவீன் அக்‌ஷதா ஜோடிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். லாரன்ஸ் மாஸ்டர் தான் டைட்டில் வின்னருக்கு பரிசுகளை வழங்கினார்.

44

அதுமட்டுமின்றி இந்த பைனல் நிகழ்ச்சியை கண்டுகளிக்க KPY பாலா, குக் வித் கோமாளி புகழ் ஆகியோரும் வந்திருந்தனர். புகழ் வழக்கம்போல் போட்டியாளர்களை கலாய்த்ததோடு அவர்களுடன் நடனமாடினார். அதேபோல் பாலா இந்த மேடையில் வந்தபோது அவரை தான் ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தார் ராகவா லாரன்ஸ். அவரின் இந்த அறிவிப்பால் எமோஷனலான பாலா மேடையிலேயே கண்கலங்கி அழுதார். இத்தகைய உணர்ச்சி மிகு தருணங்களுடன் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

இதையும் படியுங்கள்... Amala Paul: வயிற்றில் குழந்தையோடு... வளைகாப்பில் கணவருடன் ரொமான்ஸ் செய்த அமலா பால்! வைரலாகும் நியூ போட்டோஸ்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved