தங்கம் முதல் மௌனராகம் வரை.. பிக் பாஸ் வீட்டுக்கு செல்லும் குக் வித் கோமாளி.. யார் இந்த ரவீனா தாஹா?
விஜய் டிவி மற்றும் ஹாட் ஸ்டார் தமிழிலில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசன் இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பிரபல நடிகை ரவீனா தாஹா கலந்து கொண்டுள்ளார்.
Bigg Boss Tamil 7 Season
கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், அமலா பால், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன்.
Bigg Boss Tamil 7
இப்படத்தில் சின்ன பெண் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ரவீனா தாஹா. இப்படத்திற்கு பிறகு ரவீனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
raveena daha
ஆனால் அது நடக்கவில்லை. பிறகு ரவீனாவுக்கு பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு சன் டிவி சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
who is raveena daha
பிறகு விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மௌனராகம் 2 சீரியலில் நடித்து பிரபலமானார். இது அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.
bigg boss contestant raveena daha
பிறகு அதைதொடர்ந்து விஜய் டிவியின் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார் ரவீனா தாஹா.