இப்பொழுதும் சிஎஸ்கேயின் கேப்டனாக தோனியை எண்ணிக் கொண்டிருக்கும் 103 வயதான தாத்தா, தோனியை அவர் அழைக்கும் போது பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் எம்.எஸ்.தோனி. அவரது ஒவ்வொரு அசைவையும் ரசிக்க கூடிய எத்தனையோ ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு ரசிகர் தான் நம்ம தாத்தா ராம்தாஸ். இவருக்கு வயதோ 103. கிரிக்கெட் மீது ஆர்வம், ஆசை இப்பவும் அவரை சந்தோஷமாக வைத்திருக்கிறது.

பேட்டிங் என்றால் பயம். ஆனால், பவுலிங் போடுவேன். டெல்லியில் சிஎஸ்கே போட்டி நடந்தால் நடந்தே கூட செல்வேன் என்று உரக்க சொல்லும் ராமதாஸ் தாத்தா பற்றிய வீடியோவை சிஎஸ்கே தங்களது யூடியூப்பில் வெளியிட்டுள்ளது. அவரைப் பற்றி பார்க்கலாம் வாங்க…கோயம்புத்தூரில் உள்ள உடுமலைப்பேட்டையில் 1920ல் பிறந்துள்ளார். இராணுவத்தில் பணியாற்றியிருக்கிறார்.

இது குறித்து தாத்தா கூறியிருப்பதாவது: நான் கிழவன் அல்ல. 103, சீனியர் வாலிபன். நான் சீனியர் யூத் என்று சொல்லிக் கொள்கிறார். எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். கிரிக்கெட் தேவை. நான் பேட்டிங் செய்ய மாட்டேன். பேட்டிங் என்றால் எனக்கு பயம். நான் பந்துவீசவே விரும்புவேன். டெல்லியில் சிஎஸ்கே போட்டி நடந்தால் கூட நடந்தே சென்று பார்ப்பேன் என்கிறார்.

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே போட்டி நடந்தால் அழைத்து சென்றால் பார்ப்பேன். சிஎஸ்கேயின் கேப்டன் தோனி. தோனியை பார்க்க ஆசையிருக்கிறது. ஆனால், அவருக்கு எப்போது ஓய்வு இருக்கும் போது அப்போது அவர் அழைக்கட்டும், அதன் பிறகு சென்று பார்ப்போம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“I’m a senior valiban!” - Superfan Showcase ft. 103 year old S. Ramdas