இது காரா இல்ல மினி ஏரோபிளைனா.. நயன்தாரா வாங்கி இருக்கும் 'Mercedes Maybach' காரில் இத்தனை வசதிகள் இருக்கா!
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு அவரது கணவர் விக்னேஷ் சிவன் பரிசாக வழங்கி இருக்கும் மெர்சிடிஸ் மேபேக் காரின் சிறப்பம்சம் பற்றி பார்க்கலாம்.
nayanthara
நடிகை நயன்தாரா அண்மையில் தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு அவரது காதல் கணவர் விக்னேஷ் சிவன் ஒரு காஸ்ட்லி கிஃப்ட் ஒன்றை வழங்கி இருக்கிறார். விக்கி அளித்த அந்த ஸ்வீட்டான கிஃப்ட் உடன் எடுத்த புகைப்படத்தை நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது என்னவென்றால், mercedes maybach எனப்படும் சொகுசு கார் தான். பென்ஸ் நிறுவனத்தின் விலையுயர்ந்த சொகுசு கார்களில் இதுவும் ஒன்று.
mercedes maybach
mercedes maybach கார் பாலிவுட் பிரபலங்களின் பேவரைட் காராக இருந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரை ரன்பீர் கபூர், டாப்சி, ரகுல் ப்ரீத் சிங், ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர், அஜய் தேவ்கன் என எக்கச்சக்கமான பிரபலங்கள் போட்டி போட்டு வாங்கினர். இந்த கார் நடிகை நயன்தாராவின் ட்ரீம் காராகவும் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த விக்னேஷ் சிவன், அவரது பிறந்தநாளுக்கு இந்த ட்ரீம் காரை பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
mercedes maybach price
mercedes maybach காரில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளன. இது கிட்டத்தட்ட ஒரு மினி ஏரோபிளைன் என்றே சொல்லலாம், அந்த அளவுக்கு ஆடம்பர வசதிகள் இந்த காரில் நிரம்பி உள்ளன. இந்த காரின் ஆரம்ப விலை ரூ.2.69 கோடி. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ.3.4 கோடி. இந்த கார் 3982 சிசி வி8 இஞ்சின் உடன் வருகிறது. இது 557 ஹார்ஸ் பவர் திறன் கொண்டதாகும். இந்த கார் பூஜியத்தில் இருந்து நூறு கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 விநாடியில் தொட்டுவிடும் திறன் கொண்டது. இந்த காரின் டாப் ஸ்பீடு 250 கி.மீ.
mercedes maybach Specification
பர்ஸ்ட் கிளாஸ் பிரைவேட் ஜெட்டில் எந்த அளவுக்கு வசதி இருக்குமோ அதே வசதி உடன் கூடிய சீட்டுகள் இந்த காரில் இடம்பெற்று இருக்கும். அதை 43.5 டிகிரி சாய்த்துக் கொள்ளவும் முடியும். இந்த சீட்டில் மசாஜ் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. இந்த காரில் கதவை திறப்பு தொடங்கி, சீட்டை அட்ஜஸ்ட் செய்துகொள்வது வரை அனைத்துமே டிஜிட்டல் மூலம் செய்துகொள்ள முடியும். இந்த காரில் ஒரு மினி பிரிட்ஜும் இடம்பெற்று உள்ளது. இரண்டு ஷாம்பெயின் பாட்டில்களை வைத்துக்கொள்ளும் அளவுக்கு அதில் இடம் இருக்கும்.
mercedes maybach interior
இந்த காரின் வயர்லெஸ் சார்ஜிங் செய்துகொள்ளும் வசதியும் உள்ளது. உலகத்தரம் வாய்ந்த லெதரால் இதன் சீட்டுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமின்றி இதில் லேப்டாப் வைத்து வேலை செய்ய டேபிள் ஒன்றும் கொடுக்கப்பட்டு உள்ளது. அது மடக்கிக்கொள்ளும் வகையில் சீட்டின் அருகே இடம்பெற்று உள்ளது. இந்த மேபேக் கார்களுக்கென பிரத்யேக லோகாவும் காரின் முன் பகுதியில் இடம்பெற்று இருக்கும். இந்த சொகுசு காரை வாங்கிய முதல் கோலிவுட் நடிகை என்கிற பெருமைக்கு சொந்தக்காரராக நயன்தாரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Nayanthara: நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்கி! விலை மட்டும் இத்தனை கோடியா?