கோபப்பட்டாலும் கோல்டு சார் அவரு.! தன்னை தரக்குறைவாக விமர்சித்தும் வடிவேலுக்காக கேப்டன் செய்த நெகிழ்ச்சி செயல்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவை அடுத்து திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தன்னை வளர்த்துவிட்ட நடிகர் வடிவேலு விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் குறிப்பு கூட தெரிவிக்கவில்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது. எவராலும் வெறுக்க முடியாத நபராக அனைவராலும் அன்போடு கேப்டன் என அழைக்கப்பட்ட விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
vijayakanth
தமிழ் சினிமாவுக்காக பல்வேறு விஷயங்களை செய்த கேப்டன் இப்போது இல்லை என அவரது உடலை பார்த்து பல பிரபலங்கள் கண்ணீர் மல்க நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
ஆனால் விஜயகாந்த் வளர்த்துவிட்டவர்களில் ஒருவரான வடிவேலு இப்போது வரை ஒரு இரங்கல் குறிப்போ, அஞ்சலி செலுத்துவதற்கும் நேரில் வரவில்லை. விஜயகாந்த் வடிவேலு இடையே நல்ல நட்பு இருந்து வந்த சூழலில், கார் நிறுத்துவதில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் தேர்தல் நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிக கட்சி இடம் பெற்றது. அத்தேர்தலில் திமுக சார்பில் தேர்தல் பிரசாரத்திற்காக களமிறக்கப்பட்டார் வடிவேலு. அவர் பிரசாரம் செய்த இடத்தில் எல்லாம் விஜயகாந்தை தரக்குறைவாக விமர்சித்தார்.
ஆனால் உண்மையில் கோபப்பட வேண்டிய விஜயகாந்த் வடிவேலுவுக்கு எதிராக இறுதிவரை ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த வடிவேலுக்காக விஜயகாந்த் தயாரிப்பாளர்களிடம் அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், சினிமாவில் தன்னை வளர்த்தவர்களில் ஒருவரான விஜயகாந்தை வடிவேலு நேரில் சென்று பார்த்து தன் இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. நடிகர் வடிவேலு இதுவரை யாருடைய இறப்புக்கும் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.