நல்ல வேள என்னோட அனகோண்டாவுக்கு எதுவும் ஆகல... சர்ச்சைக்குரிய டயலாக்கின் பின்னணி என்ன? விஷால் விளக்கம்
மார்க் ஆண்டனி படத்தில் அனகோண்டா டயலாக் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதுகுறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
Mark Antony vishal
விஷால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் திரிஷா இல்லேனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா போன்ற திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இப்படத்தை மினி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார்.
Actor vishal
மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுடன் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபிநயா, சுனில், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 15-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது. மார்க் ஆண்டனி படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... கனவுபோல் உள்ளது... புது கார் வாங்கிய குஷியில் குக் வித் கோமாளி மோனிஷா - அதோட விலை இத்தனை லட்சமா?
vishal
இந்த நிலையில், மார்க் ஆண்டனி பட புரமோஷனுக்காக யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த நடிகர் விஷாலிடம், அப்படத்தின் ஐ லவ் யூ டி பாடலில், நல்ல வேளை என் அனகோண்டாவுக்கு எதும் ஆகல என்கிற வசனம் இடம்பெற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி விஷாலை அனகோண்டாவோடு ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த அனகோண்டா சர்ச்சைக்கு முடிவுகட்டவே இப்படி ஒரு வரி வைத்துள்ளதாக விஷால் கூறி உள்ளார்.
vishal mark antony movie
இதுகுறித்து அவர் பேசியதாவது : “மொதல்ல சீன் பேப்பர் நான் பார்க்கல. ஷுட்டிங்கின் போது தான் இந்த டயலாக் இருப்பதே எனக்கு தெரியவந்தது. ஒரு ஸ்கூட்டர் வந்து என்னை இடிக்கும் போது, நான் நல்ல வேளை என் அனகோண்டாவுக்கு எதுவும் ஆகலனு சொல்லனும்னு ஆதிக் சொன்னார். நான், இதெல்லாம் எதுக்குடானு கேட்டேன். இப்போ தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருக்கு நீ மறுபடியும் கிளப்பிவிடாதனு சொன்னேன். இல்ல நீங்களே சொல்லிட்டா அது அப்படியே ஒளிஞ்சி போயிடும்னு சொன்னான். இப்போ அது தப்பா தெரியலாம், ஆனா படத்துல கிளைமாக்ஸ்ல அது வரும்போது அதுக்கான அர்த்தம் புரியும். கைதட்டலுக்காக வச்ச டயலாக் இல்ல அது. அதுக்கான அர்த்தத்தை மார்க் ஆண்டனி பட கிளைமாக்ஸ் பார்த்து தெரிஞ்சுக்கோங்க” என கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜோடி பொருத்தம் பிரமாதம்.. மீண்டும் தனுஷுடன் இணைந்த அந்த ஹீரோயின்.. ஜோராக நடைபெறும் D50 படப்பிடிப்பு!