CWC Pugazh Baby Name: அட குக் வித் கோமாளி புகழ்.. தன்னுடைய மகளுக்கு வைத்த கியூட்டான பெயர்! என்ன தெரியுமா?
குக் வித் கோமாளி பிரபலமான, புகழுக்கு சமீபத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில்... தன்னுடைய குழந்தைக்கு கியூட்டான பெயரை சூட்டியுள்ளார்.
pugazh
'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன்னுடைய சின்னத்திரை பயணத்தை துவங்கி, பின்னர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆரம்பமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக கலந்து கொண்டு, கலக்கினார். அதே போல் CWC நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளம் வயது நடிகைகளான ரம்யா பாண்டியன், பவித்ரா, தர்ஷா குப்தா போன்ற பிரபலங்களிடம் செய்த சேட்டைகள் அதிகம் ரசிக்கப்பட்டது.
pugazh
இந்த நிகழ்ச்சி மூலம் தன்னுடைய காமெடி திறமையை வெளிப்படுத்திய புகழுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் சிக்ஸர் படத்தின் மூலம், தன்னுடைய.. நடிப்பு பயணத்தை துவங்கிய புகழ், இந்த படத்தை தொடர்ந்து, தாதா 87, காக் டெயில், சபாபதி, வலிமை, வீட்டுல விசேஷம், யானை, அயோத்தி, ஆகஸ்ட் 16 1947, கருங்காப்பியம், போன்ற பல படங்களில் நடித்தார்.
pugazh
தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற படத்தில், கதையின் நாயகனாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அதே போல் ரெடி ஸ்டெடி போ என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
pugazh
சினிமாவில் நிலையான இடத்தை பிடித்த பின்னர், தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், பென்சி கர்ப்பமாக இருந்த தகவலை புகழ் சமீபத்தில் அறிவித்தது மட்டும் இன்றி, தன்னுடைய மனைவிக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தினார். இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமந்தாவுக்கு நயன்தாரா அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்..! என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
pugazh
இதை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தன்னுடைய மகள் பிறந்த தகவலை புகழ் வெளியிட்ட நிலையில், தற்போது புகழ் தன்னுடைய செல்ல மகளுக்கு சூட்டியுள்ள பெயரையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கியூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு புகழ் போட்டுள்ள பதிவில், "என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே.. கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே... எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D