சமந்தாவுக்கு நயன்தாரா அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்..! என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
வெகேஷனில் படு பிசியாக இருக்கும் சமந்தாவுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிகவும் ஸ்பெஷலான பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara and Samantha:
தென்னிந்திய திரையுலகில், முன்னணி நடிகைகளாக இருக்கும் நயன்தாரா - சமந்தா இருவருமே 35 வயதை கடந்த பின்னரும், பல முன்னணி ஹீரோக்கள் ஜோடி போட விரும்பும் கதாநாயகிகளாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர். அதே போல் அழகு, சம்பள விவகாரம் போன்ற விஷயங்ளைலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
Charming Actress nayan And Sam
ஒரு பக்கம் இவர்கள் இருவருமே, போட்டி போட்டுக்கொண்டு திரையுலகில் அசுர வளர்ச்சி கண்டாலும், இருவருக்கும் இடையேயான நட்பு தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நட்பை மேலும் பலப்படுத்தியது என்றால் அது கடந்த 2021 ஆம் ஆண்டு, நயன் - சமந்தா நடிப்பில், விக்கி இயக்கத்தில் வெளியான 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் எனலாம்.
Lady Super Star Nayanthara set special gift:
இந்நிலையில் நடிகை நயன்தாரா, தன்னுடைய தோழிக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Nayanthara Launch 9Skin Product:
நயன்தாரா, திரைப்படம், குடும்பம், குழந்தைகள் என ஒரு பக்கம் படு பிசியாக இருந்தாலும்... மற்றொரு புறம் பிஸ்னஸிலும் கெத்து காட்டி வருகிறார். சமீபத்தில் தான், 9ஸ்கின் என்கிற நிறுவனம் ஒன்றையும், மலேசியாவில் லான்ச் செய்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Nayanthara Gift to 9Skin products:
தன்னுடைய 9ஸ்கின் நிறுவனத்தின் அழகு சாதன பொருட்களை தான் நயன்தாரா, தற்போது தன்னுடைய நெருங்கிய தோழியான சமந்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது சமந்தா மயோசிட்ஸ் சிகிச்சை எடுத்து வருவதோடு, மைண்டை ரிலாக்சிங்கிற்காக, பல நாடுகளுக்கு தொடர்ந்து வெகேஷன் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா சமந்தாவுக்கு அனுப்பிய இந்த ஸ்பெஷல் கிப்ட்டின் பபுகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.