Maanu: அஜித் சொன்ன வார்த்தை.. 'காதல் மன்னன்' படப்பிடிப்பில் ஒரே அசிங்கமா போச்சு! பல ரகசியங்களை பகிர்ந்த மானு!
'காதல்' மன்னன் படத்தின் நாயகி மானு, சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில்... ரசிகர்களுக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
Kadhal Mannan Maanu
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒரு சில படங்கள் மட்டுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, ரசிகர்கள் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடிக்கிறது.அப்படி பட்ட படங்களில் தல அஜித் நடிப்பில், கடந்த 1998-ம் ஆண்டு வெளியான 'காதல் மன்னன்' படமும் ஒன்று.
Kadhal Mannan Maanu
இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக மானு (திலோத்தமா) என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் விவேக், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், கரண், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி 25 வருடங்கள் ஆன பின்பும் கூட, பல அஜித் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
Kadhal Mannan Maanu
மேலும் இந்த படத்தின் மூலம், தன்னுடைய 16 வயதிலேயே ஹீரோயினாக நடித்த மானு, இப்படத்தை தொடர்ந்து மற்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் கூட அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், இப்படத்தில் நடிக்க முக்கிய காரணம் 'காதல் மன்னன்' படத்தில் அசிஸ்டெட் டேரக்டராக இருந்த நடிகர் விவேக் தான் என்பதை பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
Kadhal Mannan Maanu
விவேக் டான்ஸ் நிகழ்ச்சி என ட்ராமா செய்து, பின்னர் இந்த படத்தின் உள்ளே மானுவை கொண்டு வந்துள்ளார். பார்ப்பதற்கு அழகு தேவதையாக இருந்தாலும், மொழி, நடிப்பு என எதுவுமே தெரியாமல்... இயக்குனர் சரண் சொல்ல சொல்ல மட்டுமே இந்த படத்தில் நடித்ததாகவும், எனவே இந்த படத்தில், நான் நடித்ததற்காக கிரெடிட் மொத்தமும், சரணை தான் சேரும் என சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Kadhal Mannan Maanu
முதல் நாள் ஷூட்டிங், என்னுடைய முடியை சரி செய்வதற்கு... பிலிம் கேமராவை பார்த்து சரி செய்ததாகவும், இயக்குனர் என்ன செய்கிறாய் என செம்ம ஷாக்காக கேட்டார். அப்போது அனைவர் மத்தியிலும் கொஞ்சம் அசிங்கமா போச்சு, என கூறும் மானு... இதுவரை 'காதல் மன்னன்' படத்தை, ஒரு முறை கூட... முழுமையாக பார்த்தது இல்லை என்கிற ரகசியத்தையும் போட்டுடைத்துள்ளார்.
Maanu
ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகள் குறித்து பகிர்ந்த மானு, MSV கண்ணதாசனின் புகைப்படத்தை பார்த்து, அவரின் நினைவுகளில் அழுது விட்டதாகவும், பின்னர் அவரை பலர் சமாதானம் செய்ததாக தெரிவித்துள்ளார். அதே போல் அஜித்தை கட்டி பிடிப்பது போல், ஒரு சீன் எடுத்த போது... எந்த ஒரு ரொமான்ஸும் இல்லாமல், அஜித்தின் முகத்தை கூட பார்க்காமல் நடித்தேன். அப்போ அஜித் நான் அழகா தானே இருக்கேன் பின் ஏன் இயக்குனர் சொல்வது போல் முகத்தை பார்த்து நடிக்க மாட்ரீங்க என கேட்டதாக இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! குவியும் வாழ்த்து!
Maanu
மானுவுக்கு தற்போது சென்னையில் தான் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவரின் கணவர் ஒரு கேன்சர் சர்ஜன். மேலும் இவரின் குடும்பமே ஒரு டாக்டர் குடும்பம் தான், மானுவின் அம்மா, அம்மா, மாமியார், மாமனார் என அனைவருமே மருத்துவர்கள் என்பது குறிபிடித்தக்கது. மானு மருத்துவர் இல்லை என்றாலும், டிரஸ்ட் ஒன்றை துவங்கி அதன் மூலம் ஸ்பெஷல் சில்ரன்சுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
Kadhal Mannan Maanu
'காதல் மன்னன்' படத்தை தொடர்ந்து, 16 ஆண்டுகள் கழித்து என்ன சத்தம் இந்த நேரம் என்கிற படத்தில் நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். இதன் பின்னர் நடிக்க வாய்ப்பில்லை என்பதில் தெளிவாக இருக்கும் மானு, டான்சில் மட்டுமே தனக்கு அதிக ஆர்வம் என்பதையும், 25 வருடங்களாக ரசிகர்கள் தன் மீது காட்டி வரும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.