மகன் பட பூஜையில் ஆப்சென்ட் ஆன விஜய் சேதுபதி... அவர் வேற நான் வேறனு சொல்லி ஷாக் கொடுத்த சூர்யா
பீனிக்ஸ் படம் மூலம் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ஹீரோவாக அறிமுகமாகி உள்ள நிலையில், இப்படத்தின் பூஜையில் அப்பா வராதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
vijay sethupathi son
தமிழ் படங்கள் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கு சூர்யா என்கிற மகனும் உள்ளார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, குழந்தை நட்சத்திரமாக நானும் ரெளடி தான், ஜுங்கா, சிந்துபாத் போன்ற படங்களில் நடித்திருந்தார். அவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். அவர் நடிக்கும் முதல் படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
phoenix movie poster
பீனிக்ஸ் (வீழான்) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான அனல் அரசு தான் இயக்குகிறார். இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார் சூர்யா. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அயலி வெப் தொடரில் நடித்து பிரபலமான நடிகை அபி நக்ஷத்ரா நடிக்க உள்ளார். மேலும் காக்கா முட்டை விக்னேஷ், வர்ஷா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
surya sethupathi
ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படமாக இது உருவாக உள்ளது. இப்படத்திற்காக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, 6 மாதங்கள் சிறப்பு ஸ்டண்ட் பயிற்சி எடுத்துள்ளாராம். இப்படத்தின் வாய்ப்பு தனக்கு தந்தையால் கிடைக்கவில்லை என கூறிய சூர்யா, ஒருநாள் ஷூட்டிங்கிற்கு அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு செல்லும்போது, அனல் அரசு மாஸ்டர் பார்த்து தான் தன்னை நடிக்க அழைத்ததாகவும், தந்தை பெயரை பயன்படுத்தி நான் வாய்ப்பு கேட்கவில்லை, அவர் வேற நான் வேற. அதனால் தான் போஸ்டரில் கூட சூர்யா விஜய் சேதுபதி என போடாமல் என் பெயர் என மட்டும் போட்டுள்ளார்கள் என சூர்யா கூறினார்.
surya, Anal arasu
மகன் ஹீரோவாக நடிக்கும் முதல் பட பூஜையில் விஜய் சேதுபதி கலந்துகொள்ளவில்லை. அது ஏன் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அனல் அரசு மாஸ்டர், விஜய் சேதுபதி மலேசியாவில் ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளதாகவும், அங்கு பிசியாக இருப்பதன் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றும், வீடியோ காலில் அழைத்து தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... சந்தானத்தின் பில்டப் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? 80ஸ் பில்டப் படத்தின் விமர்சனம் இதோ