GOAT ஷூட்டிங் முடிந்ததும் மாநாடுடன் அலப்பறையாக அரசியல் பயணத்தை தொடங்கும் விஜய் - அதுவும் இந்த ஊரில் இருந்தா?
நடிகர் விஜய் அரசியலில் நுழைய உள்ள நிலையில், முதற்கட்டமாக ரசிகர்களை திரட்டி பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.
Thalapathy Vijay
நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் படம் தயாராகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. கோட் பட ஷூட்டிங் முடிந்ததும் விஜய் அரசியலில் குதிக்க உள்ளாராம். அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பிப்ரவரி மாதம் தன்னுடைய அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்ய திட்டமிட்டு உள்ளாராம்.
Vijay Political Party
வருகிற பிப்ரவரி 4-ந் தேதி விஜய்யின் அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான அரசியல் கட்சிக்கு தமிழக முன்னேற்றக் கழகம் என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இனி முழு நேர அரசியல்வாதியாக முடிவெடுத்திருக்கும் விஜய் தன்னுடைய கட்சியில் பெண்களுக்கு அதிகளவில் முன்னுரிமை கொடுக்க உள்ளாராம், அதிலும் குறிப்பாக படித்த பெண்களுக்கு. ஊழல் செய்துவிட்டு பிற கட்சிகளில் இருந்து அதீத செல்வாக்குடன் வந்தாலும் அவர்களுக்கு தன் கட்சியில் இடம் கிடையாது என்பதில் திட்டவட்டமாக உள்ளாராம் விஜய்.
இதையும் படியுங்கள்... திமுக, அதிமுக-வுக்கு தண்ணி காட்ட வருகிறது தளபதியின் தமுக! விஜய் தொடங்கும் அரசியல் கட்சிக்கு இப்படி ஒரு பெயரா?
Vijay Politics
மேலும் தன் கட்சிப் பதவிகளில் சினிமா சார்ந்தவர்களுக்கு பெரியளவில் முன்னுரிமை அளிக்கப்போவதில்லை என்றும் விஜய் முடிவு செய்துள்ளாராம். இப்படி பல்வேறு திட்டங்களுடன் அரசியலில் காலடி எடுத்து வைக்கும் விஜய், முதல் நகர்வாக, கோட் படப்பிடிப்பை முடித்த கையோடு, வருகிற ஏப்ரல் மாதம் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.
Vijay Plan Maanadu in Madurai
மதுரை என்பது அரசியல்வாதிகளுக்கு ஒரு ராசியான இடம் என்பது அனைவரும் அறிந்ததே. கமல்ஹாசனும் தன்னுடைய அரசியல் பயணத்தை மதுரையில் இருந்து தான் தொடங்கினார். தற்போது அதே சென்டிமென்டை விஜய்யும் ஃபாலோ செய்ய உள்ளதாக தெரிகிறது. கம கம பிரியாணி மற்றும் கறி விருந்துடன் இந்த மதுரை மாநாட்டை நடத்துவதற்கான ஆலோசனையும் ஒரு பக்கம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... லியோ படத்தை விமர்சித்து.... மேடையில் லோகேஷ் கனகராஜை டார் டாராக கிழித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்