MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • லியோ படத்தை விமர்சித்து.... மேடையில் லோகேஷ் கனகராஜை டார் டாராக கிழித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

லியோ படத்தை விமர்சித்து.... மேடையில் லோகேஷ் கனகராஜை டார் டாராக கிழித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்

லியோ படத்தை பார்த்து தான் சொன்ன விமர்சனத்தை காதுகொடுத்து கேட்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சாடி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 28 2024, 09:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும் எழில், கோலிவுட்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக எழில் 25 என்கிற விழா சென்னையில் கோலாகலமாக நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அப்போது அவர் பேசுகையில், “சமீபத்தில் ஒரு படம் பார்த்துவிட்டு, இயக்குனருக்கு போன் பண்ணி பாராட்டினேன். முதல் பாதி சூப்பர் சார், ஒரு படம் எப்படி பண்ணனும்னு உங்ககிட்ட இருந்து தான் கத்துக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அவரும் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தார். பின்னர் இரண்டாம் பாதி சரியில்ல சார்னு சொன்னேன். உடனே சார் நான் சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன் அப்பறமா கூப்பிடுறேன்னு சொன்னாரு. அப்பறம் கூப்பிடவே இல்ல. இத்தனைக்கும் படம் ரிலீஸ் ஆவதற்கு 5 நாள் முன்னாடியே நான் பர்ஸ்ட் காப்பி பார்த்துட்டு இதை சொன்னேன்.

இதையும் படியுங்கள்... இசைஞானிக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... தோல்வியில் முடிந்த இளையராஜாவின் ஒரு தலைக்காதல்!

34

நீங்கள் படத்தில் வைத்துள்ளதை போல் இந்த மதத்தில் இந்த நம்பிக்கையெல்லாம் கிடையாது சார். ஒரு தகப்பனே தன் பிள்ளையை கொல்வதெல்லாம் நல்லா இல்லனு சொன்னதும் சார் நான் அப்புறமா கூப்பிடுறேன்னு சொல்லி போனை வைத்தார். அப்பறம் கூப்பிடவே இல்லை. ஆனால் படம் ரிலீஸான பின் எல்லாரும் வச்சி செஞ்சாங்க. நான் சொன்ன விமர்சனத்தை எடுத்து அவர்கள் மாற்றி இருக்கலாம். நான் முன்கூட்டியே சொன்னதை தான் அத்தனை விமர்சகர்களும் சொல்லினார்கள். அவர்களுக்கெல்லாம் விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் தைரியம் இல்லை” என பேசி உள்ளார்.

44

அவரின் இந்த மேடைப் பேச்சில் அவர் எந்த படம் என்று குறிப்பிடாவிட்டாலும், அவர் விஜய்யின் லியோ படத்தை தான் விமர்சித்து பேசினார் என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஒருவேளை எஸ்.ஏ.சி பேச்சை லோகேஷ் கனகராஜ் கேட்டிருந்தால் படம் இன்னும் கலெக்‌ஷன் அள்ளி இருக்கும் என வருத்தம் தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் எஸ்.ஏ.சி தன் மகனின் படத்தையே இப்படி ஓப்பனாக விமர்சித்து உள்ளது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... பாட்டில் எங்கடா... பணியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பிரபல பாடகர் - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
லோகேஷ் கனகராஜ்
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved