பாகிஸ்தானைச் சேர்ந்த பாடகரான ரஹத் ஃபதே அலிகான் தன்னுடைய பணியாளரை ஷூவால் தாக்கிய வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

புகழ்பெற்ற பாகிஸ்தான் பாடகரான ரஹத் ஃபதே அலிகான் தன்னுடைய பணியாளரை ஷூவால் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் அவர் பாட்டில் எங்கடா என கேட்டு அந்த பணியாளரை அடிக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் மது பாட்டிலை கேட்டு தான் பணியாளரை தாக்கியதாக கூறி அந்த வீடியோவை வைரலாக்கினர்.

பின்னர் இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து இதுகுறித்து விளக்கம் அளித்த பாடகர் ரஹத் ஃபதே அலிகான், அவன் என்னுடைய மகன் மாதிரி, பாட்டிலில் வைத்திருந்த புனித நீரை காணவில்லை என்கிற ஆத்திரத்தில் அவனை தாக்கிவிட்டதாக கூறி இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் ரஹத் ஃபதே அலிகான் விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா... சொர்க்கத்தையே கப்பலில் இறக்கிட்டாங்க! முதல் பயணத்தைத் தொடங்கிய பிரம்மாண்ட கப்பல்!

மேலும் அவன் நல்லது செய்தால் அவன் மீது அன்பு காட்டுவேன் என்றும், அவன் தப்பு செய்தால் தண்டிப்பேன் என்று அவர் கூறி இருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக அடிவாங்கிய நபர் அளித்துள்ள விளக்கத்தில் அவர் என் அப்பா மாதிரி, என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும், அவரது புகழுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வீடியோவை சிலர் வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர் என கூறினார்.

Scroll to load tweet…

பாடகர் ரஹத் ஃபதே அலிகான் தாக்கியதால் காயமடைந்த அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாராம். ரஹத் ஃபதே அலிகான் விளக்கம் அளித்தாலும் அவர் செய்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முதல் முறையாக நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றிய அமெரிக்கா!